Sunday, November 2, 2008

சிங்கை அறிஞர் அரங்கம்

சிங்கப்பூர் ஹார்பர் ஃப்ரன்ட் ரயில் நிலையத்துல இன்னிக்கு சாயங்காலம் ஒரே பரபரப்பு. வெளிய வந்து செந்தோசா தீவுக்கு போற சிறு ரயில் நிலையத்துக்கு வந்தா அங்க‌யும் ஒரே அமர்க்களம். டிக்கட் ஆபீசர் டிக்கட் குடுத்து குடுத்து களைச்சுப் போய் உக்காந்துருக்காரு. என்னடா இதுன்னு யோசிச்சுக்கிட்டே போனப்பறம்தான் தெரிஞ்சுது நம்ம சிங்கைப் பதிவர்கள் பெருந்திரளாக(!!)செந்தோசா தீவுல ஆசிய‌க் க‌ண்ட‌த்தோட தென்கோடி முனைல‌ கூடியிருந்தாங்க. மொத்தம் 21 பேர்.

மாலை 4:30 மணியிலிருந்து ஒவ்வொருத்தரா வர ஆரம்பிச்சாங்க. விஜய் ஆனந்தும், கோவி.கண்ணனும், வரவங்களுக்கும் செல்போன்ல வழி சொல்லிக்கிட்டே இருந்தாங்க.

"வ‌ந்துட்டீங்களா... பஸ் புடிச்சு டால்ஃபின் லகூன்ல எறங்கி அப்பிடியே பீச் ஓரமா வந்து, தொங்கு பாலத்துல ஏறி இந்தப் பக்கம் வந்துருங்க... நாங்க வெய்ட் பண்றோம்..."

இந்த‌ சந்திப்புல முக்கிய பதிவர்கள் மலேசியாவிலிருந்து வந்திருந்த விக்கி (எ) விக்னேஸ்வரன் மற்றும் திண்டுக்கல் திரு.சுப்பிரமணியம். (இவர் அண்மையில் மறைந்த பதிவர் திருமதி.அனுராதா அவர்களின் கணவர்.)


கோவி.கண்ணன், திரு.சுப்பிரமணியம், மலேசியா "விக்கி"

5 மணி சுமாருக்கு வந்தவங்க ஒருத்தரை ஒருத்தர் அறிமுகம் செய்துகிட்டு கோக் (அட... சொன்னா நம்பணும்.. வெறும் கோக்தான்..) குடிச்சுட்டு இருக்கும்போது இன்னும் சிலரும் வந்து ஜோதில ஐக்கியமானாங்க. விக்கி தன்னைப் பற்றியும், பொதுவாக மலேசிய பதிவுலகத்தைப் பத்தியும் சொன்னாரு. பெறகு, இது மாதிரி சந்திப்புக்கு மொதத் தடவயா போற என்ன மாதிரி "டெபுடன்ட்ஸ்" சுய அறிமுகம் நடந்தது. அப்பறம் திரு சுப்பிரமணியம் பேச வந்தாரு. தன் மனைவியைப் பத்தியும், அவங்களோட கடைசி நாட்களைப் பத்தியும் ரொம்ப உருக்கமா சொன்னாரு. அவங்க மறைவுக்கு பிறகு அவங்களைப் பத்தின எண்ணங்களும், உணர்வுகளும் அந்த அளவுக்கு அவரை ஆக்கிரமித்து இருக்குனு தெரிய வந்தபோது மனசு ரொம்ப கெனத்துப் போச்சு. புற்றுநோய் பத்தின விழிப்புணர்வை எப்பிடி பரப்பறது, எங்க ஆரம்பிக்கறதுன்னு யோசனையா இருக்காரு. தவிர ஒரு புத்தகமும் வெளியிட முயற்சி செய்துகிட்டுருக்காரு. சீக்கிரமே அது நல்ல முறையில் வெளி வந்தா சமுதாயத்துக்கே நன்மை.

அப்பறம் ஃபோட்டோ செஷன், உரையாடல்கள், கலாய்த்தல்கள்னு ஜாலியாப் போச்சு. 7:30 மணி சுமாருக்கு சபையக் கலைச்சுட்டு, ஒரு குருப் லிட்டில் இந்தியா கொடைக்கடையில் இட்லி சாப்பிட போக, மத்தவங்க (நான் உள்பட) வூட்டுக்கு ஜூட்.

ஃபோட்டோ செஷன் (தொப்பியுடன் நான்)

இன்றைய அறிஞர் அரங்க‌த்துக்கு வந்திருந்தவர்கள்:
திரு. சுப்பிரமணியம், விக்னேஸ்வரன், கோவி.கண்ணன், ஜோசப் பால்ராஜ், விஜய் ஆனந்த், "முகவை மைந்தன்" ராம், பாரி அரசு, ஜோதிபாரதி, கிரி, ஜோ மில்டன், கிஷோர், மீனாட்சி சுந்தரம், சிவா, ராம், சிங்கை நாதன், ராஜா, அகரம் அமுதா, பெங்களூர் ராம், சாம்பார்மாஃபியா மற்றும் நான்.


அறிஞர் அரங்கம்

வால் 1: வ‌ந்திருந்த எல்லாப் பதிவர்களுக்கும் விக்கியின் "திருக்குறள் ‍ ஒரு எளிய அறிமுகம்" புத்தகம் அன்புப்பரிசு.

வால் 2 : பாரி அரசுவின் திருமணம். நவம்பர் 24 பட்டுக்கோட்டையில்.

வால் 3 : திரு.சுப்பிரமணியன் அவருடைய மகன் வீட்டுல இருந்து மசால் வடை, சீயம்னு சுவையான பலகாரங்கள்.

23 பேர் என்ன நெனைக்கிறாங்கன்னா..:

கோவி.கண்ணன் said...

வெல்டன் மகேஷ் !

எளிமையான அழகான தொகுப்பு !

மீ த பர்ஸ்ட் !

:)

புதுகை.அப்துல்லா said...

கோவி அண்ணே!! முதல்ல வெளியூர்காரங்கள மீ த ஃபர்ஸ்டு போடவுடனும்...ஒ.கே??? :)

புதுகை.அப்துல்லா said...

ஜாலி பேச்சு (தொப்பியுடன் நான்)

//

அண்னே நீங்க ரொம்ப நல்லவரு...உங்களுக்குதான் குல்லா போட்டுகுறீங்க அடுத்தவங்களுக்கு இல்ல :)))

ஜோசப் பால்ராஜ் said...

மின்னல் வேகத்தில் பதிவர் சிங்கை தேசியப் பதிவர் மாநாட்டைப் பற்றி எழுதிட்டீங்க.
வாழ்த்துக்களும், நன்றிகளும் மகேஷ்.

விஜய் ஆனந்த் said...

:-)))....

கோவியாரை விட அதிவேகமாக பதிவு போட்டு, மின்னல் பதிவர் பட்டத்தை தட்டிச்சென்ற மகேஷுக்கு வாழ்த்துகள்!!!!

// (அட... சொன்னா நம்பணும்.. வெறும் கோக்தான்..) //

கோக்கா??? என் கண்ணுல காட்டவேயில்ல???

பழமைபேசி said...

புகைப்படம், கொஞ்சம் பெருசாப் போட முடியுமா? அல்லார்த்தையும் பாக்கனும் இல்ல??

Sathis Kumar said...

வெற்றிகரமானதொரு பதிவர் சந்திப்புக் கூட்டத்தை ஏற்பாடு செய்து நடத்தியவர்களுக்கு வாழ்த்துகள்..

யாழ் Yazh said...

:)

Mahesh said...

வ‌ருகை தந்தவர்களுக்கும், பின்னூட்டமிட்டவர்களுக்கும் நன்றி....

ஆனா வந்தவிக யாருமே ஓட்டுப் போடல :(((((

வடுவூர் குமார் said...

எங்கே அல்வா?ஒரு படத்திலும் காணவில்லை.
சிங்கை நாதன் வீட்டு அல்வா நன்றாக இருக்குமே! அவுங்க வெளியூர் போயிட்டாங்களா?

Subramanian said...

நன்றாகத் தொகுத்து இருக்கிறீர்கள்.வாழ்த்துகள்.

கிஷோர் said...

கலக்கல் மகேஷ்.

நண்பர்களே நானும் கொஞ்சம் விரிவா பதிவு போட்டிருக்கேன்.
படிச்சுப்பாருங்க.

http://pathividukiren.blogspot.com/2008/11/blog-post.html

வெண்பூ said...

ம்ம்ம்... மறுபடியும் பதிவர் சந்திப்பா!!! அதுவும் 21 பேர்.. கலக்குங்க.. விக்கி ப்ரொஃபைல்ல சின்ன வயசு போட்டோவை போட்டு ஏமாத்துறது தெரிஞ்சிருச்சிங்கோவ்.. :))))

சின்னப் பையன் said...

21 பேரோட சந்திப்பா???? கலக்குங்க...

விக்கி அண்ணே -> சௌக்கியமா???

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//"சிங்கை அறிஞர் அரங்கம்"//


தலைப்பை பார்த்து விட்டு கொஞ்சம் அதிர்ந்தது உண்மைதான்.
நாமெல்லாம் வரிஞர்கள்தானே(c)என்று கொஞ்சம் மனசைத் தேற்றிக் கொண்டேன்.
நல்ல தொகுப்பு!

Mahesh said...

@ ஜோதிபாரதி :

வாங்கண்ணே... வருகைக்கு நன்றி..

நாம எப்பவும் நம்மள அறிஞர்னுதான் சொல்லிக்கறது.. நாமளே சொல்லலேன்னா அப்ப்றம் யார் சொல்றது? :))

கிரி said...

மகேஷ் போட்டு தாக்குங்க :-)

ஆமா இன்னும் கொஞ்சம் படத்தை காணோம் !!!

சிங்கை பதிவர்கள் எண்ணிக்கை அதிகமாகிட்டே போகுது ;-)

பரிசல்காரன் said...

வெண்பூவோட விக்கி பத்தின கமெண்டுக்கு ரிப்பீட்டேய்..

அப்புறம், தலைப்பை ரொம்ப ரசிச்சேன்!

சி தயாளன் said...

என்னது..சிங்கை அறிஞர் அரங்கமா..அப்ப நான் வந்து கலந்திருந்தா...”பேரறிஞர் அரங்கம்..”?

Mahesh said...

@ கிரி :

படமெல்லாம் கொவி.கண்ணன் ஆன்லைன் ஆல்பத்துல இருக்கு... அவர் லிங்க் குடுத்திருந்தாரே...

@ பரிசல் :

வாங்க.. ரொம்ப நாளைக்கப்பறம் வறீங்க... வீடெல்லாம் செட்டில் ஆயாச்சா?

@ டொன் லீ :

கரெக்டுங்க... மொதல்ல பேர‌றிஞர்னுதான் போட்டேன்... அப்பறம் நீங்க வாராதது உறச்சுது...

Sanjai Gandhi said...

நல்ல விவரணை.. வாழ்த்துக்கள் மகேஷ்.. :)

//வால் 1: வ‌ந்திருந்த எல்லாப் பதிவர்களுக்கும் விக்கியின் "திருக்குறள் ‍ ஒரு எளிய அறிமுகம்" புத்தகம் அன்புப்பரிசு.

அட. நம்ம விக்கி புத்தகம் எல்லாம் எழுதி இருக்கானா? வெரி குட்..

//வால் 2 : பாரி அரசுவின் திருமணம். நவம்பர் 24 பட்டுக்கோட்டையில்.//

திருமண வாழ்த்துக்கள் திரு. பாரி.அரசு.

//வால் 3 : திரு.சுப்பிரமணியன் அவருடைய மகன் வீட்டுல இருந்து மசால் வடை, சீயம்னு சுவையான பலகாரங்கள்.//
பாக்கும் போதே சாப்டனும் போல இருக்கே.. :)

Sanjai Gandhi said...

கோவியாரே கோச்சிக்காதிங்க..

முதல் பட்த்தில் உங்கள் உடையை( குறிப்பாக பேண்ட்) பார்த்ததும் லொடுக்கு பாண்டி நினைவுக்கு வந்துட்டார்.. :)))

அது பேண்டா டவுசரா சாமி? :))

நல்லா குடுக்கறாங்கய்யா போசு :)))

சி தயாளன் said...

//@ டொன் லீ :
கரெக்டுங்க... மொதல்ல பேர‌றிஞர்னுதான் போட்டேன்... அப்பறம் நீங்க வாராதது உறச்சுது//

:))