Thursday, October 16, 2008

ஒரு நாடு, ஒரு உலகம் - சர்வ நாசம்

Greed is a bottomless pit which exhausts the person in an endless effort to satisfy the need without ever reaching satisfaction.

- Erich Fromm (1900–1980), U.S. psychologist. Escape from Freedom, ch. 4 (1941).

இன்னி தேதிக்கு ஹாட் டாபிக் பேங்குகள் திவாலாகறதும், அத வால் புடிச்சு வந்திருக்கற பொருளாதார நெருக்கடியும். அப்பிடி என்னதான் ஆச்சு ராத்திரியோட ராத்திரியா? ஏன் எல்லாரும் ஒரு நா காலங் காத்தால திடீர்னு மஞ்சக் காய்தம் குடுத்துட்டு தலைல முக்காடு (அவிங்களுக்கு இல்ல, நமக்கு... அதுவும் நம்ம கோமணத்தயே உருவி !!) போட்டுட்டு போயிட்டாங்க? தென்ன மரத்துல தேள் கொட்டுனா பன மரத்துல நெறி கட்ற மாதிரி அமெரிக்காவுல பேங்க் திவாலானா ஆஸ்திரேலியாவும் ஐரோப்பாவும் ஏன் மருந்து போட்டுக்கறாங்க? நாலு பக்கம் விசாரிச்சுப் பாத்தப்பறந்தான் ஓரளவுக்கு புரிஞ்சது (அப்பிடின்னு நான் நெனச்சுக்கிட்டுருக்கேன்). சரி நமக்கு புரிஞ்சத ஒரு பதிவாப் போட்டோம்னா இன்னும் நாலு பேரு தலயப் பிச்சுக்கிட்டு திரியலாம்... நமக்கும் கம்பெனி வேணுமே.

மொதல்ல இது திடீர் வீழ்ச்சியே கிடையாது. கிட்டத்தட்ட ஒரு வருஷமா கரையான் அரிக்கிற மாதிரி மாதிரி கொஞ்சம் கொஞ்சமா நடந்துருக்கு. முதலீட்டு ஆராய்ச்சியாளர்கள், ஆலோசகர்கள், வங்கிகள், கடன் குடுக்கறவங்க, வாங்கறவங்க, சில்லரை/பெரு முதலீட்டாளர்கள் அப்பிடின்னு பல "எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரங்கள்" இந்த இன்னிய நெலமைக்கு பொறுப்பு. இன்னும் கொஞ்சம் கீழ போய் பாத்தா.... ஒரே ஒரு காரணம்தான்.....பேராசை.

நம்ம எல்லாருக்கும் ஒரு கனவு இருக்கு. நமக்குன்னு ஒரு வீடு வாங்கிறணும். இந்தக் கனவை ரொம்ப கச்சிதமா எக்ஸ்ப்ளாய்ட் பண்ணப் போய் இன்னிக்கு இவ்வளவு சீரழிவுல நிக்கறோம். நம்ம ஊர்ல ஒருத்தன் வீட்டுக்கடன் வேணும்னு கேட்டா, என்ன வேலை பண்றோம், என்ன சம்பளம் வாங்கறோம், என்ன செலவு பண்றோம், எவ்வளவு சேத்துருக்கோம் / சேத்து வெக்கறோம், குடும்ப சூழ்நிலை எப்பிடி, ஜாதகம் நல்ல இருக்கா, கடன திருப்பிக் கட்டுவானா, ஜாமீன் யாரு, பெரிய வீடு எவ்வளவு, சின்ன வீடு எவ்வளவு அப்பிடின்னு எல்லாம் பாத்துட்டு திருப்தி இருந்தாத்தான் பேங்க் கடன் தருது. இல்லயா? (இல்லயா??? !!!) அமெரிக்காவுலயும் இப்பிடித்தான் நடந்துக்கிட்டு இருந்துது. ரெண்டு வருஷம் முன்னாடி வரைக்கும். சில மாகானுபாவனுங்க ரூம் போட்டு யோசிச்சாங்க. இப்பிடியே போனா மார்க்கெட் எப்ப பெருசாறது, எப்ப நெறய காசு பாக்கறது? என்ன பண்ணலாம்? சரி. அடிப்படையான ஒரு அனுமானம் பண்ணிக்குவோம். அதாவது வீட்டுல போடற காசு கண்டிப்பா வளரும், குறையவே குறையாது அப்பிடின்னு தீர்மானம் போட்டங்க. ஆச்சா? இந்த (வரட்டு) சித்தாந்தத்தை சந்தைல எப்பிடி கொண்டு போய் சொருகறது? தகுதி இருக்கோ இல்லயோ, எல்லாருக்கும் கடனக் குடு. கொஞ்சம் சலுகைகள், குறந்த வட்டி, சந்தைக்கு தகுந்த மாதிரி மாறுகிற வட்டி விகிதம் (Variable Interest Rate) அப்பிடின்னு அள்ளி வீசு. எல்லாரும் வீடு வாங்கட்டும். டிமேண்ட் அதிகமாகும். வீடுகளோட மதிப்பு அதிகமாகும். கொஞ்ச நாள்லயே நெறய காசு பண்ணலாம். இது ஒரு பக்கம்.

இன்னொரு பக்கம். இது மாதிரி குடுக்கற கடனுக்கு அந்த சொத்துதான் அடகு. இந்த அடகுகளையெல்லாம் பண்டில் பண்டிலாப் பண்ணி "அடகு பின்நிறுத்திய பங்குகள்" (Mortgage Backed Securities MBS) அப்பிடின்னு பண்ணினாங்க. [உதாரணத்துக்கு, இப்ப 2 லட்சம் டாலர் மதிப்புள்ள 10 வீடுகள் அடகுல இருந்தா, மொத்தம் 20 லட்சத்தை 10 டாலர் முக மதிப்புள்ள (face value) 2 லட்சம் பங்குகளா மாத்திடறது.] அந்தப் பங்குகள பங்குச் சந்தைல வித்தாங்க. சாதாரணமா கம்பெனி பங்குகள் வாங்கற மாதிரி, இதுகளையும் பேங்குகளும், சின்ன/பெரிய முதலீட்டாளர்களும் வாங்கி குவிச்சாங்க. மத்த பங்குகள விட இதுல லாபம் நெறய கிடைச்சுது. எல்லாம் கொஞ்ச நாளைக்குதான். கடன் குடுத்த கம்பெனிக்கு பங்குகளை வித்தா பணம் திரும்ப கெடச்சுரும். கடன் வாங்கினவன் பணத்தை திருப்பி குடுக்க குடுக்கத்தான் அடகு ஸ்டெடியா இருக்கும். ஆனா கடன வாங்கினவங்கள்ல பாதிப் பேரோட செக்குக மொத மாசத்துல இருந்தே திரும்பி வர ஆரம்பிச்சுது. இன்னும் கொஞ்சம் சலுகை குடுக்கறது, அடகை மாத்தி விடறதுன்னு என்னென்னமோ குட்டிகரணம் போட்டுப் பாத்தாங்க. அப்பறம் வேற வழியில்லாம, கடன்காரனை வெரட்டி விட்டுட்டு சொத்தெல்லாம் விற்பனைக்கு வந்துது. இப்ப சப்ளை அதிகமாக ஆரம்பிச்சுது. விலை தானா குறைய ஆரம்பிச்சுது. MBS வாங்கினவங்க பாடு திண்டாட்டமாயிருச்சு. பங்குக்கு பின்னால இருக்கற அடகுகளோட மதிப்பு குறைஞ்சதால பங்கோட விலையும் சரிஞ்சுது. அதனால வந்த வரைக்கும் லாபம்னு பங்குகளை விக்கலாம்னா சந்தைல இது மாதிரி ஏகப்பட்டது விற்பனைக்கு இருக்கு. இன்னும் சரிவு. சொத்து விலையும் குறையுது, பங்கு விலையும் சரியுது. போட்ட முதலுக்கே மோசம்னு ஆயிருச்சு. Avalanche Effect மாதிரி பெரிய...பெரிய்ய்ய்ய்ய்ய சரிவு. பில்லியன் கணக்குல மதிப்பு இருந்த சொத்தெல்லாம் சில மில்லியன்கள், சில ஆயிரங்கள்னு படு பயங்கரமா சரிஞ்சாச்சு. என்னதான் தலை கீழா தண்ணி குடிச்சாலும் இந்த சரிவுல ஆகற நஷ்டத்தை குறைக்கவே (hedge) முடியாது.

இன்னொரு பக்கத்துல, இந்த அடகுப் பங்குகளை வாங்கின கம்பெனிக எல்லாம் இத தங்களோட சொத்து (asset) கணக்குல காமிச்சதால அவங்க கம்பெனியோட பங்குகள் விலையும் ஏறிடுச்சு. மத்த நாடுகள்ல (குறிப்பா ஜப்பான், சைனா) இருக்கற முதலீடு கம்பெனியெல்லம் அமெரிக்க பேங்குகளோட பங்குகளையோ அல்லது அமெரிக்க பேங்குகள் மூலமா அடகுப் பங்குகள்லயோ பெரிய அளவுல வாங்கி முதலீடு செஞ்சு வெச்சுருந்தாங்க. அவங்களுக்கும் தாங்க முடியாத அளவுக்குப் பெரிய அடி.

எங்கியோ அமெரிக்கவுல சில பேரு பேராசை புடிச்சு திருப்பித் தர முடியாதவனுக்கு (sub-prime) எல்லாம் கணக்கில்லாம கடன் குடுக்கப் போக, இன்னிக்கு உலகம் பூரா பேங்குக திவாலாகற சூழல். இத சரி பண்ண கெவுர்மெண்டுக எல்லாம் பில்லியன் பில்லியனா பணத்தை கொட்டறாங்க. யார் பணத்த? நம்ம வரிப் பணத்தை. இந்த பேராசை புடிச்ச பேங்குகளும் கம்பெனிகளும் கொள்ளை கொள்ளையா சம்பாதிச்சப்ப நமக்கு ஒரு பைசா கிடைச்சதில்ல. இப்ப அவங்களோட அறிவுஜீவித் தனத்தால ஆன நட்டத்தை சரிக்கட்ட நம்ம வரிப்பணமெல்லம் தண்ணி மாதிரி செலவழியுது. என்ன கொடுமை சரவணன் சார்? இதெல்லாம் சரியாக இன்னும் 3 குவாட்டர் ஆகும் 4 குவாட்டர் ஆகும்கறாங்க. அதான் ஃபுல்லா ஊத்தி மூடிட்டாங்களே. இங்க பணத்தப் போட்டு நட்டமானவனுக்கு இப்ப ஒரு 90 கட்டிங்குக்கே லாட்டரி.

இதுதான் எனக்குப் புரிஞ்சு சிம்பிளா சொல்ல முடிஞ்சது. (இதுல எதாவது தப்ப இருந்தா விசயம் தெரிஞ்ச மக்கள் தயவு செஞ்சு சரி பண்ணிடுங்க.) இன்னும் இதுக்குப் பின்னால இன்னமும் சிக்கலான வியாபாரங்கள் நிறைய இருக்கலாம். Derivatives, Options, Oil Futures, Commodity Futures, Structured Products...இப்பிடி நிறைய.... இதெல்லாமும் இந்த நெருக்கடிக்கு எப்பிடி துணை போச்சு, எப்பிடி உலக அளவுல திடீர்னு விலைவாசி உயர்வுக்கு ஏணி வெச்சுக் குடுத்துதுன்னு இன்னொரு நாள் சாவகாசமா கொழப்பறேன்.

பேராசை பெரு நஷ்டம்

Greed brings grief.

44 பேர் என்ன நெனைக்கிறாங்கன்னா..:

வெண்பூ said...

கலக்கல் மஹேஷ்.. அருமையா விளக்கியிருக்கீங்க (சரியாகவும்).. இப்ப அமெரிக்கா அரசாங்கம் பண்ணிட்டு இருக்குறத பாத்தா உங்க ப்ளாக் பேர்தான் ஞாபகத்துக்கு வருது.. :)))

பழமைபேசி said...

ஆமை பூந்த ஊடும், ...க்கா பூந்த நாடும் நல்லா இருந்ததா வரலாறு இல்ல மக்களே! நான், இப்ப போய்ட்டு மறுக்கா வருவேன்!!

பழமைபேசி said...

இப்ப முழுசுமா படிச்சுட்டேன்.... சில‌ விபரங்கள் விடுபட்டு இருக்கு....ஆனா, நீங்க இரத்தின சுருக்கமா, அடிப்படைய சரியாச் சொல்லி இருக்கீங்க.... சபாசு! ஒரு சில பொருளாதார மேதாவிங்க அரசாங்கத்தோட மீட்புப் பணியை நியாயம்ன்னு பேசக் கூடும். அதனால, நம்மோட பங்குக்கு:

//இத சரி பண்ண கெவுர்மெண்டுக எல்லாம் பில்லியன் பில்லியனா பணத்தை கொட்டறாங்க. யார் பணத்த? நம்ம வரிப் பணத்தை. //

மேதாவி சொல்லுறது: நாங்க கடனாத்தான் தர்றோம். மறுபடியும் காசு அவிங்களுக்கு புழக்கத்துக்கு வந்த ஒடனே, நாங்க திருப்பி வாங்கிக்கிடுவோம். மக்கள் வரிப்பணம் வீணாவாது.

நாம: அட வெண்ணை, நீங்க அப்படித்தான் சொல்லுவீங்க. மெதுவா, குடுத்த கடனுக்கு அவிங்க நிறுவனப் பங்குகளை வாங்குறோம்னு சொல்லுவீங்க. அப்புறம், அதுல நட்டம். அத ஈடு கட்டணும்னு சொல்லுவீங்க.... விவாதம் இல்லாம சட்டம் போட்டு, கடனத் தள்ளுபடி பண்ணுவீங்க....இந்த சாமான்யன், அதை அந்த கால கட்டத்துல மறந்து போறதும் உங்களுக்கு வசதியாப் பூடும்.

பாடம்: எதிர்காலக் கனவுகளை காணுங்க அப்பு. வேனாம்னு சொல்லலை. கனவுல விவசாயம் பாக்குற விவசாயிக்கு, நெலமாவது அவனோடதா இருக்கனுமா இல்லையா?

தும்ப விட்டுட்டு வாலைப் புடிக்கக் கூடாதுன்னு பெரியவிங்க சொல்லி வெச்சாங்களே?!

பரிசல்காரன் said...

சரியான விளக்கம் கொடுத்திருக்கிறீர்கள்!

அருமை!!!

Mahesh said...

நன்றி வெண்பூ...

மிக்க நன்றி பழமைபேசி. கரெக்டு. இதயும் சேத்து எழுதியிருக்கணும்.

நன்றி பரிசல்...

விஜய் ஆனந்த் said...

இப்பதான் மேட்டரு எனக்கு தெளிவா புரியுது...என்னமோ recession-ன்றாங்க...அந்த index கொறையுது..இந்த் market சரியுதுன்றாங்களேன்னு நானும் ஒரு மார்க்கமா மண்ட கொழம்பி திரிஞ்சிகிட்டிருந்தேன்...

நன்றி..

Mahesh said...

@ விஜய் ஆனந்த் :

அட...நீங்கதானா.....பெரிய பின்னூட்டமா போட்டுட்டீங்க :))))))))))))))

குடுகுடுப்பை said...

1998 லேயே ஒரு ஆராய்ச்சி நிறுவணம், வீட்டு லோன் டீபால்ட் ஆகும்னு சொல்லிருக்காங்க.யாரும் கேக்கல.

ஒருத்தன் வீடு வாங்க 0% down. 1 year no payment.

5000000 வாங்கி 550000 வித்து 50000 லாபம். முதலீடு $0.00. இப்ப வீட்டோட விலை 3000000, நஷ்டம் வங்கிக்கு. என்ன மாதிரி long term investors தான் ரொம்ப ஏமாந்தோம். என்னோடது கண்டிப்பா அதிக ஆசை அல்ல, ஆனால் எவனோ ஆசைப்பட சங்கு எனக்கு, என்னத்த சொல்ல.

வீடு ஒரு குடியிருக்கும் இடமே தவிர முதலீடு அல்ல என்பதுதான் உண்மை.

Mahesh said...

வாங்க குடுகுடுப்பை.... என்னத்தை சொல்ல? ஒரு வருஷம் முன்ன short term னா 6 மாசம் - 1 வருஷம் long term னா 3 - 5 வருஷம். இன்னிக்கு short term 25 வருஷம் long term 1 சென்சுரி ஆயிரும் போல :(

http://urupudaathathu.blogspot.com/ said...

சனிக்கிழமை எனக்கு ( உண்மையிலே )

அப்ப்ரைசல் இருப்பதால்,

மேலும் இரண்டு நாட்களுக்கு நோ பின்னூட்டம்.. பொருத்துகொள்ளுங்கள்..

( நான் போட மாட்டேன்... பட் எனக்கு நீங்க போடலாம் )

Anonymous said...

மகேஷ்,

தெளிவா, எல்லாருக்கும் புரியற மாதிரி எழுதி இருக்கீங்க. போன வருஷம், இங்க (ஆஸ்திரேலியா) ஒரு டிவி ப்ரோக்ராம்ல, சத்யஜித் தாஸ் என்கிற ஒருத்தர் வந்து பேசினார். அதுல sub prime, derivatives, hedge funds பத்தி விளக்கிட்டு, Global recession கண்டிப்பா வரும். எந்த நாடும் அவ்வளவு சுலபமா தப்பிக்க முடியாது. பாதிப்பு எல்லோருக்கும் இருக்கும். எந்த அளவுங்கரதுதான் வித்தியாசப்படும். உஷாரா இருந்துக்குங்க அப்படின்னு.

இதைப் பத்தி நண்பர்கள் கிட்ட பேசுனப்போ, நிறைய பேர் இதைப் பாக்கவேயில்லைன்னு தெரிஞ்சது. அது மட்டுமில்லாம, எங்கள கிண்டலா வேறப் பாத்தாங்க, 'உனக்கு வேற வேலையில்லையா? அவன் சொல்றத எல்லாம் நம்பிக்கிட்டுன்னு.' இப்பவும் இதை நம்பாதவங்களும் இருக்காங்க. என்னத்த சொல்ல?

சத்யஜித் சொன்ன காரணங்களில் ஒன்னு, இந்த hedge fund ஐ நிர்வகிக்கற companies.
அவங்களோடோ செயல்பாடுகள் வெளிப்படையா இல்லை. விதி முறைகள் சரியா
வரையறுக்கப் படவில்லை.

Anonymous said...

நாங்க சிங்கையில இருந்தப்பவும் (94-97) வீட்டு விலைகள் உச்சத்தில இருந்தது. அதைக் குறைக்க அரசாங்கம் சில விதி முறைகளைக் கொண்டு வந்தாங்க. அந்த சமயத்துலயும் ஒரு recession வந்தது(வேற சில காரணங்கள்). ஆனா அது Global recession இல்லை. இப்ப என்ன ஆகும்னே தெரியல.

Mahesh said...

@ அணிமா :
ஆப்பு ரெடி பண்ண இவ்வளவு நேரம் ஆகுமா? நல்லபடியா முடிச்சுட்டு ஒர் பதிவு போடுங்க... பொடி வெச்சு (பழமைபேசி கவனிக்க) எழுதுங்க... நாங்க புரிஞ்சுக்கறோம்

Mahesh said...

@ அனானி :

வாங்க. நல்ல செய்தி சொல்லிருக்கீங்க... ஆனா நீங்க யாருன்னு தெரிஞ்சா நல்லாருக்கும்... அடிக்கடி வாங்க... ஆமா 94 - 97 ஒரு ரீஜனல் ரிசஷன்... இப்ப இது உலகளவுல... பயமாத்தான் இருக்கு

Anonymous said...

//@ அனானி :

வாங்க. நல்ல செய்தி சொல்லிருக்கீங்க... ஆனா நீங்க யாருன்னு தெரிஞ்சா நல்லாருக்கும்... அடிக்கடி வாங்க... ஆமா 94 - 97 ஒரு ரீஜனல் ரிசஷன்... இப்ப இது உலகளவுல... பயமாத்தான் இருக்கு //

பதில் அளித்தமைக்கு நன்றி மகேஷ். உங்க பதிவுகள ஆரம்பத்திலிருந்தே படிக்கிறேன். எளிமையா, சுவாரஸ்யமா எழுதறிங்க. பாராட்டுக்கள். பரிசல் மற்றும் அப்துல்லா பதிவுகள்ளயும் உங்களைப் பத்தி படிச்சேன்/ பார்த்தேன். நான் ஒரு வாசகர் மட்டுமே. Blogger account கிடையாது. பாலராஜன் கீதா, விஜய் ஆனந்த் மாதிரி பின்னூட்டப் பதிவர் ஆகலாமான்னு யோசிச்சுகிட்டிருக்கேன். ஆனாலும் தயக்கமா இருக்கு.

// குடுகுடுப்பை said...
1998 லேயே ஒரு ஆராய்ச்சி நிறுவணம், வீட்டு லோன் டீபால்ட் ஆகும்னு சொல்லிருக்காங்க.யாரும் கேக்கல.

ஒருத்தன் வீடு வாங்க 0% down. 1 year no payment.

5000000 வாங்கி 550000 வித்து 50000 லாபம். முதலீடு $0.00. இப்ப வீட்டோட விலை 3000000, நஷ்டம் வங்கிக்கு. என்ன மாதிரி long term investors தான் ரொம்ப ஏமாந்தோம். என்னோடது கண்டிப்பா அதிக ஆசை அல்ல, ஆனால் எவனோ ஆசைப்பட சங்கு எனக்கு, என்னத்த சொல்ல.

வீடு ஒரு குடியிருக்கும் இடமே தவிர முதலீடு அல்ல என்பதுதான் உண்மை.//

வீட்டு விலை எல்லா இடத்துலயும் ரொம்ப ஏறிப் போச்சுங்க. நாங்க இருக்கறது வாடகை வீடு. ஆனா நாங்க குடுக்கற வாடகையை விட, வீட்டு owner அதிகமா மாதத் தவணை கட்டறாரு. அவரு இப்ப இதை விட பெரிய வீடா வாங்கி, அதில இருக்காரு. எல்லாம் sub prime, tax benefit உபயம். :-))))

மனோ-சித்ரா

Mahesh said...

@ மனோ - சித்ரா :

நன்றிங்க.... என்னங்க தயக்கம்? இப்ப நானெல்லாம் எழுதலயா? ஒரு மாசம் போல பல பதிவுகளப் படிச்சேன். பதிவு எழுதறதும் பிடிபட்டுது, (பதிவுலகத்துல இருக்கற அரசியலும் பிடிபட்டுது... சரி எங்கதான் அரசியல் இல்ல?) நிறைய பின்னூட்டம் போடுங்க... கூடவே அப்பப்ப எழுதுங்க... வாழ்த்துக்கள் !!

கிரி said...

மகேஷ் நல்லா எளிமையா கூறி இருக்கீங்க. எனக்கே புரிந்து விட்டது :-)

இன்னும் பல தகவல்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

அப்புறம் எல்லோரும் ஏன் அங்கேயே போய் முதலீடு செய்யுறாங்க?

Mahesh said...

வாங்க கிரி... ப்ரொமோசன் கெடச்ச பிறகு கொஞ்சம் சைலன்டா இருக்கீங்க போல... பையன் பிறந்ததை எஞ்சாய் பண்ணிட்டுருக்கீங்களா? என்சாய்....

Anonymous said...

மகேஷ்...உண்மையிலேயே மிகவும் அருமையாக எழுதி இருக்கிறீர்கள். இரண்டு, மூன்று வாரங்களுக்கு முன்பு 'டைம்' பத்திரிக்கையில் இதைப் பற்றி எழுதி இருந்தார்கள்...கொஞ்சம் குழப்பமாக இருந்தது. அது இப்போதுதான் தெளிந்தது. என்னடா...போறவன் வறவன் எல்லாம் 'பேங்க்' திறக்கிறான்னு யோசிச்சேன்....'சிட்டி பேங்க்' காரி...ஃபோனைப் போட்டு சும்மாவாவது லோன் வாங்கிக்கங்க சார்னு ...சொன்னப்ப ரொம்ப கொழம்பினேன்...என்னடா...நம்ம வீடு கட்டனப்ப...தெருத் தெருவா அலைய விட்டாங்க...இப்ப கூப்டு கூப்டு குடுக்கறானே...என்ன விஷயம்னு அப்ப புரியலை...இப்பத்தான்யா புரியுது...நம்மளைப் போட்டுப் பாக்க பாத்துருக்கானுகன்னு...எங்களை மாதிரி மண்டையிலே மசாலா இல்லாத பட்டாளத்துக் காரனுகளையெல்லாம் யாருய்யா இவனுக கிட்டேயிருநது காப்பாத்துவாங்க? காக்காசு...கவர்மெண்டு காசு..அதையும் புடுங்க..கால் கடுக்க நாலு பேர் நிக்கிறாஙக. கலி முத்திருச்சோ??

அது சரி said...

மஹேஷ்,

நல்லா அழகா எழுதிருக்கீங்க..எல்லாரும் உங்களுக்கு ஆதரவா தான் எழுதிருக்காங்க. அதனால, நான் கொஞ்சம் எதிர்மறையா எழுதறதை மன்னிச்சுக்குங்க...

//
மொதல்ல இது திடீர் வீழ்ச்சியே கிடையாது. கிட்டத்தட்ட ஒரு வருஷமா கரையான் அரிக்கிற மாதிரி மாதிரி கொஞ்சம் கொஞ்சமா நடந்துருக்கு. முதலீட்டு ஆராய்ச்சியாளர்கள், ஆலோசகர்கள், வங்கிகள், கடன் குடுக்கறவங்க, வாங்கறவங்க, சில்லரை/பெரு முதலீட்டாளர்கள் அப்பிடின்னு பல "எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரங்கள்" இந்த இன்னிய நெலமைக்கு பொறுப்பு. இன்னும் கொஞ்சம் கீழ போய் பாத்தா.... ஒரே ஒரு காரணம்தான்.....பேராசை.

//

ஆசை இல்லாத மனிதர் எனக்கு தெரிந்து எவரும் இல்லை. எது ஆசை, எது பேராசை என்று வரையறைப்படுத்துவது? அதை விடுங்கள்.. ஆனால், நீங்கள் சொல்லி இருக்கும் வீட்டு பிரச்சினையில் முக்கிய காரணம் பேராசை அல்ல. இரண்டாயிரமாவது ஆண்டில் ஏற்பட்ட பொருளாதார பின்னடைவிலிருந்து (recession என்பதின் சரியான தமிழாக்கமா?) மீள்வதற்கு வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டன. எக்கனாமியும் பிக்கப் ஆகவே அதையொட்டி வீட்டு விலைகள் மட்டுமல்ல, பல்வேறு பொருட்களின் டிமாண்டும் அதிகமாக ஆரம்பித்தது. Demand vs Supply என்பது தான் முக்கியமே தவிர, யாரோ சில பேர் ரூம் போட்டு யோசித்து விலை ஏற்றவில்லை..

எந்த ஒரு வியாபாரமும் அதன் மார்க்கெட் எல்லைகளை விரிவு படுத்துவதில் தான் இருக்கிறது. ஆக, வங்கிகளும், மற்ற முதலீட்டாளர்களும் இதை உபயோகப்படுத்தி கொண்டார்கள் என்பது தான் உண்மையே தவிர, வேண்டுமென்றே விலை ஏற்றியதாக தெரியவில்லை..

//
அதாவது வீட்டுல போடற காசு கண்டிப்பா வளரும், குறையவே குறையாது அப்பிடின்னு தீர்மானம் போட்டங்க. ஆச்சா? இந்த (வரட்டு) சித்தாந்தத்தை சந்தைல எப்பிடி கொண்டு போய் சொருகறது? தகுதி இருக்கோ இல்லயோ, எல்லாருக்கும் கடனக் குடு. கொஞ்சம் சலுகைகள், குறந்த வட்டி, சந்தைக்கு தகுந்த மாதிரி மாறுகிற வட்டி விகிதம் (Variable Interest Rate) அப்பிடின்னு அள்ளி வீசு. எல்லாரும் வீடு வாங்கட்டும். டிமேண்ட் அதிகமாகும். வீடுகளோட மதிப்பு அதிகமாகும். கொஞ்ச நாள்லயே நெறய காசு பண்ணலாம்
//

வரட்டு சித்தாந்தம் என்று எந்த அர்த்தத்தில் சொல்கிறீர்கள் என்று தெரியவில்லை. ஆனால், நீங்கள் சொல்லியிருப்பதில் ஒரு விஷயம் சரி. மேலே போகும் எதுவும் கீழே வந்து தான் தீரும், இது விதி.. ஆனால், பிரச்சினை அது எவ்வளவு தூரம் கீழே வரும் என்பதை Quantify செய்வதில் தான். கொஞ்சம் வட்டு, சலுகைகள், சந்தைக்கு தகுந்த மாதிரி மாறுகிற வட்டி விகிதம் எல்லாம் அள்ளி வீசுவதல்ல.. ஒரு திறந்த பொருளாதாரத்தில் அப்படி தான் நடக்கும்... சந்தைக்கு ஏற்ற மாதிரி தான் வியாபாரம் செய்ய முடியும்..

//
MBS வாங்கினவங்க பாடு திண்டாட்டமாயிருச்சு. பங்குக்கு பின்னால இருக்கற அடகுகளோட மதிப்பு குறைஞ்சதால பங்கோட விலையும் சரிஞ்சுது. அதனால வந்த வரைக்கும் லாபம்னு பங்குகளை விக்கலாம்னா சந்தைல இது மாதிரி ஏகப்பட்டது விற்பனைக்கு இருக்கு. இன்னும் சரிவு. சொத்து விலையும் குறையுது, பங்கு விலையும் சரியுது. போட்ட முதலுக்கே மோசம்னு ஆயிருச்சு. Avalanche Effect மாதிரி பெரிய...பெரிய்ய்ய்ய்ய்ய சரிவு. பில்லியன் கணக்குல மதிப்பு இருந்த சொத்தெல்லாம் சில மில்லியன்கள், சில ஆயிரங்கள்னு படு பயங்கரமா சரிஞ்சாச்சு. என்னதான் தலை கீழா தண்ணி குடிச்சாலும் இந்த சரிவுல ஆகற நஷ்டத்தை குறைக்கவே (hedge) முடியாது.
//

நீங்கள் சொல்லி இருப்பதில் டெக்னிக்கலாக ஒரு தவறு இருப்பதாக தெரிகிறது.. இது வரை வாங்கிய கடனில் டீஃபால்ட் செய்தவர்களின் சதவீதம் என்ன? ஒட்டு மொத்தமாக ஒரு 10% இருக்குமா? அப்படி இருக்கையில், ஏன் இத்தனை பெரிய சரிவு??

உண்மையில், பிரச்சினைக்கு முக்கிய காரணம் Mortgage Default என்பதே அல்ல. அது ஒரு Trigger மட்டுமே... பிரச்சினையின் மிக முக்கியமான காரணம் CDS, CDO எனப்படும் ஒரு வகையான இன்சூரன்ஸ் மார்க்கெட்டே. CDS, CDO என்ற ஒரு சப்‍ மார்க்கெட் ட்ரில்லியன் கணக்கில் பாதிக்க காரணம் Margin Trading & Margin Collateral. உலகில் கிட்டத்தட்ட 90% பிஸினஸ்கள், மிக முக்கியமாக மிகப்பெரும் வணிக நிறுவனங்கள், வங்கிகள் wholesale credit market டில் இருந்து கடன் வாங்கியே வணிகத்தை நடத்துகின்றன. அந்த கடனுக்கு கொல்லாட்ரலாக காட்டியதும் அவர்கள் வாங்கியிருந்த (விற்றிருந்த அல்ல!) CDS, CDO தான்.

இது எங்கெல்லாம் எதிர்பாராத விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை இங்கு விளக்குவது மிகக்கடினம் என்பதால் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்..

//
எங்கியோ அமெரிக்கவுல சில பேரு பேராசை புடிச்சு திருப்பித் தர முடியாதவனுக்கு (sub-prime) எல்லாம் கணக்கில்லாம கடன் குடுக்கப் போக, இன்னிக்கு உலகம் பூரா பேங்குக திவாலாகற சூழல்.
//

எங்கியொ அமெர்க்காவில் இருக்கும் அந்த பேராசை பிடித்தவர்களால் தான், கார் விற்பனை அதிகமாகியது, சென்னையில் Ford factorய் திறந்தது.. எங்கியோ அமெரிக்காவில் இருக்கும் பேராசை பிடித்தவர்களால் தான், திருப்பூரின் காட்டன் மில்கள் அதிகம் பேரை வேலைக்கு எடுத்தன...எங்கியோ அமெரிக்காவில் இருக்கும் பேராசை பிடித்த வங்கிகளால் தான் இந்தியாவில் சாஃப்ட்வேர் துறை அதீத வேகத்தில் வளர்ந்தது... அமெரிக்க பேராசையினால் தான் சிலேவின் காப்பர் மைன்கள் (தமிழில் சுரங்கம்??) அதிக லாபமீட்டின..

எங்கியோ இருக்கறவனுங்க பேராசைனால எங்களுக்கெல்லாம் கஷ்டம் என்று சொல்வது எனக்கு சரியாகப் படவில்லை.

//
நம்ம வரிப் பணத்தை. இந்த பேராசை புடிச்ச பேங்குகளும் கம்பெனிகளும் கொள்ளை கொள்ளையா சம்பாதிச்சப்ப நமக்கு ஒரு பைசா கிடைச்சதில்ல.
//

நீங்கள் பங்கு வாங்கியிருந்தால் உங்களுக்கு நேரடியாக பணம் கிடைத்திருக்கும்.. நீங்கள் பங்கு வாங்காவிட்டாலும் அதன் பலன் மறைமுகமாக உங்களுக்கு(ம்!) வந்தது என்பதே உண்மை.. நீங்கள் என்ன தொழில் செய்கிறீர்கள் என்பது எனக்கு தெரியாது.. ஆனால், பெரும்பாலான நாடுகளில் பெரும்பாலான மக்களுக்கு இது நேரடியாகவோ இல்லை மறைமுகமாகவோ பலனளித்தது என்பதை ஒப்புக்கொள்ள யாரும் தயாராக இல்லை.

வாழ்ந்தால் என்னால் வந்தது, வீழ்ந்தால் அமெரிக்காவால் வீழ்ந்தோம் என்பது எனக்கு சரியாகப் படவில்லை!

//
இப்ப அவங்களோட அறிவுஜீவித் தனத்தால ஆன நட்டத்தை சரிக்கட்ட நம்ம வரிப்பணமெல்லம் தண்ணி மாதிரி செலவழியுது. என்ன கொடுமை சரவணன் சார்?
//

வீட்டு விலைகள் மேலே சென்ற போது...வீடு கட்டுபவர்கள், சுரங்கத்தில் வேலை பார்த்தவர்கள், கார் ஃபேக்டரியில் வேலை பார்த்தவர்கள், காஃபி ஷாப்பில் வேலை பார்த்தவர்கள், சாஃப்ட்வேர் எழுதியவர்கள், விவசாயிகள்...எவருமே பலன் அடையவில்லையா என்ன?? $100K சம்பளத்தில் இருந்த ஒருவர், $200K சம்பளம் தருகிறேன் என்று யாரும் கூப்பிட்டால் வேண்டாம் என்று சொன்னதாக தெரியவில்லை!

தவிர, அமெரிக்காவிலிருந்து, பிரிட்டன், ஆஸ்திரேலியா வரை அரசுகள் அறிவித்திருப்பது கியாரண்டியே தவிர, அப்படியே தூக்கி கொடுத்து விடவில்லை..அவனால் முடியாட்டி நான் தர்றேன் என்று சொல்வது போல இது. அத‌ற்குள், அய்யோ எங்க‌ வ‌ரிப்ப‌ண‌மெல்லாம் போச்சே என்று சொல்வ‌து நியாய‌மா??

எது எப்ப‌டியோ, நான் என‌க்கு தெரிந்த‌தை சொல்லியிருக்கிறேன்..த‌வ‌றாக‌ இருந்தால் ம‌ன்னித்துக் கொள்ளுங்க‌ள்.

அது சரி said...

//
பழமைபேசி said...
இப்ப முழுசுமா படிச்சுட்டேன்.... சில‌ விபரங்கள் விடுபட்டு இருக்கு....ஆனா, நீங்க இரத்தின சுருக்கமா, அடிப்படைய சரியாச் சொல்லி இருக்கீங்க.... சபாசு! ஒரு சில பொருளாதார மேதாவிங்க அரசாங்கத்தோட மீட்புப் பணியை நியாயம்ன்னு பேசக் கூடும். அதனால, நம்மோட பங்குக்கு:

//

நான் மேதாவி இல்லை என்றாலும், மீட்பு பணியை நான் நியாப்படுத்தி பேசுகிறேன்!

உங்களுக்கு பதில் அளிக்க முடிந்தவரை முயல்கிறேன்..ஆனால், இன்னொருவரின் பதிவில் தொந்தரவு செய்ய விருப்பம் இல்லை. அதனால், நீங்கள் இது குறித்து தனிப்பதிவிட்டால் அதுல வச்சிக்குவோம் :0)

Anonymous said...

Gurumurthy had been writing about oncoming disaster, and cautioning everyone about dollar miscues.
Read the M R Venkatesh speaking about dollar problems. http://vijaybalajithecitizen.blogspot.com/search/label/Mail
view of a person living in India, but neverthless, it indicates the dollar crisis well.
Also, August 15 1971 is a significant day, when the whole world surrendered their sovereiginity to the US.
Anyone standing upto them, will face the music.

Anonymous said...

There are two views whether US consumerism is good or not.
One view is that, if US does not consume, then there is no market to products from other countries (remember US is still the largest importer of almost everything). So market wise this is good.
But internal to US, this has wiped out their manufacturing base and 2nd US people have started to live outside of their means. Savings is almost zero, or more negative if you do not consider Indian and Mexican population savings in the US.
As I said in the previous comment, its a double edged sword, the rest of the world has huge piles of US dollar reserver, so no one can let the US dollar go down, which means their reserve value is going down.
Somewhere it has to start, Saddam tried to switch to Euro, we know what happened to him, now Iran is trying to create an oil exchange in Teheran, (they abandoned it after US pressure, in July). China has one of the largest US dollar reserve, if anything happens to dollar, China is in big, very big danger of seeing their savings and earnings get wiped out. Google Aug 15th 1971 Nixon statement, when gold back up to dollar is withdrawn, and so current US dollar is just paper. If every other world currency starts to appreciate to their real value, then exports to US will become costly, so you wont do, but what do you do with all your produce?
So its a vicious cycle the world is in, and everyone is scrambling to get out of this, but no one has any solid answers and courage yet.

பழமைபேசி said...

//So its a vicious cycle the world is in, and everyone is scrambling to get out of this, but no one has any solid answers and courage yet.
//

அனாமதேய‌ அன்பருக்கு வணக்கம். நல்ல பல தகவல்களைச் சொல்லி இருக்கீங்க. நன்றி!

நான் இது பத்தி ஒரு பதிவு எழுதிட்டு இருக்கேன். இருந்தாலும், எனக்குத் தெரிஞ்சதை இங்க‌ சொல்ல ஆசைப்படுறேன்.

காந்தியும், காரல் மார்க்சும் சொன்னதுதான். உலக அமைதிக்கு முக்கியம் முடிந்தவரை தன்னிறைவு. 1880 வாக்குல மார்க்சு சொன்னது, அது இந்தியாவுல இருந்தது, காரணம் வலுவான கிராமியக் கட்டமைப்பு. எதுவானாலும், சுத்து பத்து பதினெட்டு கெராமத்துக்குள்ளயே முடிஞ்சது.

இன்னைக்கு, உலகமயமாக்கல்னு சொன்னோம். இப்ப, அதை அப்படியே திருப்பி வாசிக்க வேண்டிய சூழ்நிலை. இல்லாட்டா, அமெரிக்காவுல சாமன்யனுக்கு சோறு கூடக் கெடைக்காத நிலை வரலாம். அப்படி செய்யுற பட்சத்துல, உலகமயமாக்கல்னால பலன் அடைஞ்ச இந்தியா உள்பட இன்ன பிற நாடுகள் பாதிக்கத்தான் வேணும். ஏன்னா, லாபம் பாத்தமே?! நட்டப்பட்டும் ஆகணும். அப்பத்தான் கணக்கு சரியாகும். ஆக, தன்னிறைவே வழி.

ஆனால், தொலைந்துவிட்ட கிராமியக்கட்டமைப்பு? எள்ளுப்பாட்டன், கொள்ளுப்பாட்டனோட ஆன்மா, நம்மள மன்னிக்காதுடி!!!

Mahesh said...

@ அதுசரி :

வாங்க... வருகைக்கும் செய்திகளுக்கும் நன்றி... நான் எழுதியிருக்கற மாதிரி, இந்த பிரச்னையை ரொம்ப சிம்பிளா சொல்ல முயற்சி பண்ணேன்... கூடவே பின்னால இருக்கற சிக்கலான கொடுக்கல் வாங்கல்கள் (நீங்க சொன்ன CDO, CDS...) இதெல்லம் பத்தி பின்னாலா எழுத இருந்தேன். இருந்தாலும், நீங்க சொல்றதும் சரிதான்... பிரச்னையின் மறுபக்கத்தை சொல்லியிருக்கீங்க. ஆனாக் கூட எவ்வளவோ நிஜமான மேதவிகள் இந்த house bubble பத்தி சொன்னபோது சிரிச்சுட்டு போயிட்டு இன்னிக்கு எல்லாருமா அனுபவிக்கறோம்.... நீங்க் சொன்னதுல எதுவும் தவறு இல்ல.... நான எளிமையா சொல்லப் போய் சில முக்கியமான விஷயங்கள் விடுபட்டுப் போச்சு... மீண்டும் நன்றி

Mahesh said...

@ anony :

Welcome and thanks for your comments

Anonymous said...

மகேஷ்,

பிரச்சினையை சரியாக அலசியிருக்கிறீர்கள்.

புதுகை.அப்துல்லா said...

recession என்பதின் சரியான தமிழாக்கமா?) //

பொருளாதார மந்தம் என்பது சரியான பதம்.

பழமைபேசி said...

புதுகையார்,

வணக்கம்! மந்தப் பொருளாதாரம்ன்னு மாத்தி சொன்னா இன்னும் நல்லா இருக்குங்றது நம்ம அபிப்ராயம். உ‍-ம் மந்தமான வானிலை. இங்க மந்தம்ங்றதுதான் துணைச் சொல்.

வெண்பூ said...

//
புதுகை.அப்துல்லா said...
recession என்பதின் சரியான தமிழாக்கமா?) //

பொருளாதார மந்தம் என்பது சரியான பதம்.

October 20, 2008 3:39 AM


பழமைபேசி said...
புதுகையார்,

வணக்கம்! மந்தப் பொருளாதாரம்ன்னு மாத்தி சொன்னா இன்னும் நல்லா இருக்குங்றது நம்ம அபிப்ராயம். உ‍-ம் மந்தமான வானிலை.
//

மந்தம் என்பது "மெதுவாக" என்பதை குறிக்கும் என்று நினைக்கிறேன். உதாரணமாக சென்ற ஆண்டு 8 சதவீதமாக இருந்த பொருளாதார வளர்ச்சி இந்த ஆண்டு 2 சதவீதமாக இருக்கும் என்று சொன்னால் அதை மந்தம் என்பது சரியாக இருக்கும்

ஆனால் recession ல் பொருளாதாரம் வளர்வதே இல்லை அதாவது நெகட்டிவ் வளர்ச்சி. எனவே அதை "பொருளாதார சுருக்கம்" அல்லது அது தொடர்பான வேறு வார்த்தைகளில் அழைக்கலாம். அவர்களே recession என்பதை விளக்கும்போது "Is our economy shrinking?" என்றுதான் சொல்கிறார்கள்.

சொல்லப்போனால் தற்போதைய அமெரிக்க பொருளாதார நிலையையே மந்தமாகத்தான் இருக்கிறது. வரும் 30ம் தேதி ஜி.டி.பி. டேட்டா வரும்போதுதான் வளர்ச்சி நெகட்டிவ்வா என்பது தெரியும். (recession க்கு தொடர்ந்து இரு குவார்ட்டர்களுக்கு நெகட்டிவ்வில் வளர்ச்சி இருக்கவேண்டும்)

சரியா?

பழமைபேசி said...

புதுகையார்,

பொழச்சிப் போறேன் விட்டுடுங்க.... வலைல பாத்தா, நீங்க சொன்னத்துதான் புழக்கத்துல இருக்கு...ஆகவே, நான் குட்டையக் கொழப்ப வேணாம்...

ஆனா, இலக்கணந்தான் கொஞ்சம் ஒதைக்குது.... உச்சரிப்பு பாக்குற காலமாச்சே...பொழச்சிப் போறேன் விட்டுடுங்க! :-o)

பழமைபேசி said...

@@@வெண்பூ said...
எனவே அதை "பொருளாதார சுருக்கம்" அல்லது அது தொடர்பான வேறு வார்த்தைகளில் அழைக்கலாம்.
//

நீங்க சொல்லுறது இன்னும் நல்லாவும், பொருள் பொதிஞ்சும் இருக்கு...

பொருளாதாரச் சரிவு??

யாருங்க அங்க, எங்க பழமையும் கொஞ்சம் கேளுங்க வந்து.

வெண்பூ said...

//
பொருளாதாரச் சரிவு
//

சரியாக, அழகான, பொருத்தமான வார்த்தை.. (ஆனால் பொருளாதாரத்தில் சரிவு இருந்தால் அழகாகவோ அல்லது வாழ்க்கைக்கு பொருத்தமாகவோ இருக்காது என்பது வேறு விசயம்).. :)))

பழமைபேசி said...

பொருளாதார வீழ்ச்சி - depression

பழமைபேசி said...

//(ஆனால் பொருளாதாரத்தில் சரிவு இருந்தால் அழகாகவோ அல்லது வாழ்க்கைக்கு பொருத்தமாகவோ இருக்காது என்பது வேறு விசயம்)..
//

அண்ணா, இன்னும் இங்க(U.S) சந்தையே தெறக்கல....இப்படி பேதி குடுக்குறீங்களே? :-o)

வெண்பூ said...

//
பழமைபேசி said...
பொருளாதார வீழ்ச்சி - depression
//

ஆஹா.. வேணாங்க.. ரிசஸன் பத்தியே பேச்செடுத்ததுக்கே பேதி ஆகுது நீங்க டிப்ரஸன் பத்தியெல்லாம் பேச ஆரம்பிச்சிட்டீங்க.. :)

ஆனா வார்த்தை சரியாத்தான் இருக்கு பொருளாதார சரிவை சரி செய்யாவிட்டால் அது வீழ்ச்சியில் போய் முடியும்.

வெண்பூ said...

//
பேதி குடுக்குறீங்களே?
//
கோ இன்சிடன்ஸ்.. நானும் இதே வார்த்தையை போன பின்னூட்டத்தில போட்டிருக்கேன். :))

பழமைபேசி said...

//வெண்பூ said...
கோ இன்சிடன்ஸ்.. நானும் இதே வார்த்தையை போன பின்னூட்டத்தில போட்டிருக்கேன். :))
//

ஆமாங்க.... நாம அடுத்தவங்க‌ திண்ணையில ஒக்காந்து இப்பிடிப் பேசிட்டு இருந்தா, ஊட்டுக்காரரு வந்து திட்டப் போறாரு?! வாங்க, ஓடிறலாம்....

:-o)))

Mahesh said...

நான் உள்ள இருந்து திண்ணப் பேச்சை ஒட்டுக் கேட்டுக்கிட்டுத்தான் இருந்தேன்... நல்லா பேசுறாங்கையா டீட்டெய்லு..... நீங்க நடத்துங்க அய்யாமார்களே... ரசமா இருக்கு :))

பொருளாதார இறக்கம், பொருளாதார சறுக்கல் - இந்த வார்த்தைகள் எப்பிடி?

வெண்பூ said...

//
Mahesh said...
நான் உள்ள இருந்து திண்ணப் பேச்சை ஒட்டுக் கேட்டுக்கிட்டுத்தான் இருந்தேன்... நல்லா பேசுறாங்கையா டீட்டெய்லு..... நீங்க நடத்துங்க அய்யாமார்களே... ரசமா இருக்கு :))
//

ஹி..ஹி.. நீங்க திட்டுவீங்களோன்னுதான் நாங்க ரெண்டு பேரும் கிளம்பிட்டோம்..

//
பொருளாதார இறக்கம், பொருளாதார சறுக்கல் - இந்த வார்த்தைகள் எப்பிடி?
//
ஆஹா.. இதுவும் சரியா இருக்கே!! ஒரு ரிசஸ்சனுக்கு தமிழ்ல இத்தனை வார்த்தையா?

பழமைபேசி said...

கூடிட்டாங்க அய்யா...கூடிட்டாங்க....

இறக்கம்: ‍‍ இது தெரிஞ்சு, ஒரு நோக்கத்தோட நிகழ்த்துற‌து
சறுக்கல்: தெரிஞ்சு ஒன்னு செய்யப் போய், அதுல பிறழ்றது

Mahesh said...

அப்ப.... சறுக்கல் சரிதானா? தெரிஞ்சே - ஆனா ஆகாதுங்கற குருட்டு தைரியத்தோட - போய் சறுக்குனாங்களே.... கூடவே அல்லாத்தயும் கூட்டிக்கிட்டு போனாங்களே...

அட... நல்ல ஒப்பாரி :))

Anonymous said...

ஐயா...நாமெல்லாம் இவ்வளவு தூரம் குழம்பிக்கிட்டு இருக்கோம்...இதுக்குக் காரணமான மகானுபாவர்கள் கொஞ்சமாவது இதைப் பத்தி கவலைப்படற மாதிரி தெரியவில்லை. நம்ப பங்குக்கு நானும் கொஞ்சம் கொழப்பறேன்...recession....'பொருளாதாரப் பின்னடைவு'...என்று சொல்லலாமா?


@பழமைபேசி: தவிட்டுக் காசு படித்தேன்...ஒரு சந்தேகம்....ஆடி மாசக் காத்துல...தவிடு எங்கய்யா நிக்கும்? உடுமலைப்பேட்டை காத்து சும்மாவா?

பழமைபேசி said...

பொருளாதாரப் பின்னடைவு - சரியான தெரிவு. அண்ணா, வாழ்த்துக்கள்!

//@பழமைபேசி: தவிட்டுக் காசு படித்தேன்...ஒரு சந்தேகம்....ஆடி மாசக் காத்துல...தவிடு எங்கய்யா நிக்கும்? உடுமலைப்பேட்டை காத்து சும்மாவா?//

மகா சிவராத்திரி, மாசி மாசந்தாண்ணே!