Sunday, October 5, 2008

திரு(வலை)ப்பூர்

(துக்ளக் மகேஷ், பரிசல் க்ருஷ்ணா, ஈரவெங்காயம் சாமிநாதன், வெயிலான் ரமேஷ்)

போன வாரம் திருப்பூரில் சில பதிவர்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பு
கிடைத்தது. அதைப் பத்தி ஏற்கெனவே பரிசல் இங்க பதிவு போட்டுட்டாரு. நாம வழக்கம் போல லேட்டு. சிங்கப்பூர் திரும்பி வந்ததும் எழுதலாம்னு இருந்தேன். நம்ம பரிசலார் பாணியிலேயே எழுதலாம்னு தோணுச்சு.

பரிசல்காரன் (கிருஷ்ணா)

ஒரு மணிக்கு வரேன்னு சொன்னாரு. 1:30 ஆச்சு. வந்தாரா வரலியா? இப்பப் பாத்து இந்த பிரச்சனை. 15 நிமிஷத்துல முடிஞ்சுடும்னு நெனைக்கிறேன்.... எப்பிடியும் வெயிலான் போய் கூட்டிக்கிட்டு போய்டுவாரு. ஆமா ரெண்டு பேருக்கும் மத்தவங்க ஃபோன் நம்பர் தெரியாதே. பாத்துக்கலாம்.

திருப்பூர்னு பேரு... பல்லடத்துக்கு பக்கத்துல இருக்கோம். எப்பிடி வேகமா போனாலும் 30 நிமிஷத்துக்கு கொறயாது. வாரா வாராம் யாராவது ஒரு பதிவர் வரதும் நாம விருந்தோம்பறதும்... என்னமோ போ இதுக்கே தனியா பட்ஜெட் ஒதுக்கணும் போல இருக்கு.... ஏதோ லக்கிலுக், சாருன்னாலும் பரவால்ல...


மொதல்ல நம்ம ஆபீஸ் இடத்த மாத்த சொல்லணும். புது பஸ் ஸ்டாண்டுக்கு பக்கத்துல இருக்கு. இருந்தாலும் வர பதிவர்களை நாமதான் மொதல்ல சந்திக்கறோம். நல்ல வேளை.. மகேஷ்... சாப்பாட்டு நேரத்துல வராரு... சமாளிச்சுடலாம்... இல்லேன்னா இன்னும் கொஞ்ச நாள் போனா ஆபீஸ்லயே கேக்க ஆரம்பிச்சுருவாங்க - இன்னிக்கு எதுவும் பதிவர் சந்திப்பெல்லாம் இல்லயான்னு.

ஈரவெங்காயம் (சாமிநாதன்)

இன்னிக்கும் யாரொ ஒரு புது பதிவராமே... சிங்கப்பூர்ல இருந்து வராராம்... போய்த்தான் பாப்போம். நமக்கு தெரிஞ்சு துக்ளக்னு ஒரு பத்திரிகை இருக்கு. வர ஆளு துக்ளக் மாதிரி இல்லாம இருந்தா சரி.

மகேஷ்

என்னடா இது 1/2 மணி நேரமா நிக்கறோம். வண்டி அனுப்பறேன்னாரு பரிசல். யாரு வருவாங்க, எப்பிடி கண்டு புடிக்கறது...ம்ம்ம்ம்..... போலீஸ் ஸ்டேஷன் வாசல்ல வேற நிக்கறோம்.. எதாவது சந்தேகக் கேஸ்ல போட்டுட்டாங்கன்னா.... பரிசல்காரனுக்காக வெய்ட் பண்றேன்னு சொன்னா விட்ருவாங்களா? அந்த ஹோண்டா ஸ்கூட்டர்ல வர்றவரைப் பாத்தா வெயிலான் மாதிரி இருக்கே....

வெயிலான்

என்னடா இது பஸ் ஸ்டாண்டுக்கு வந்துட்டோம்.... ஆளு யாருன்னு தெரியலயே.... யாரு இவுரு நம்மளப் பாத்து சிரிச்சுக்கிட்டே வராரு.. கஸ்டம்ஸ்ல கூட இப்பிடி ஒரு ஆளு இருக்கற மாதிரி ஞாபகம் இல்லயே... என்ன கை குலுக்கறாரு... அட இவுருதான்மகேஷா.... நாம என்னமோன்னு நெனச்சோமே.... ஒஹோ பரிசலோட பதிவுகள்ல நம்ம ஃபோட்டோ பாத்திருப்பாரு போல. உக்காருங்க போகலாம். மணி ரெண்டு ஆகுது. எப்பிடியும் மூணே காலுக்கெல்லாம் பரிசல் வந்துடுவாரு. நாம நேரா இப்ப ஹோட்டலுக்கு போறோம். பரிசலும், ஈரவெங்காயமும் அங்க வந்துடுவாங்க.

மகேஷ்

ஹோட்டலுக்கு வந்து 20 நிமிஷம் ஆச்சு. வெயிலான் வேற ஃபோன்லயே இருக்காரு. நாம என்ன பண்றதுன்னு தெரியலயே? இங்க இருக்கப் போற 2 மணி நேரமோ, 3 ம்ணி நேரமோ இவுங்க ஃபோன்லயே பேசிக்கிட்டுருந்தாங்கன்னா? சாப்புடும்போதாவது பேச முடியுமா?

வெயிலான்

பரிசல் கூட பேசினேன். இன்னும் அஞ்சு நிமிஷத்துல கெளம்பிடுவேன்னு சொன்னாரு. நாம போய் சாப்பாடு ஆர்டர் பண்ணி சாப்பிட ஆரம்பிக்கலாம். இதோ சாமிநாதனும் வந்துட்டாரு.

(சாமிநாதனும் மகேஷும் அளவளாவல். மகேஷ், வெயிலான் மற்றும் சாமிநாதன் உள்ளே சென்று அமர்தல். உணவு தருவித்தல்)

பரிசல்

அப்பாடா.... கெளம்பியாச்சுன்னு சொல்லிட்டோம். அவ்வளவா ட்ராஃபிக் இல்ல. 3 மணிக்கு போய் சேந்துடலாம்.

மகேஷ்

வாங்க... பரிசல்... இண்டியன் ஸ்டேண்டேர்ட் டைம் 3 மணிக்கு வந்துட்டீங்க. ஆமா அஞ்சு நிமிஷத்துக்கு எத்தனை நிமிஷம்? 1:30 மணியிலேருந்து 5 நிமிஷம்னே சொல்லிட்டிருக்கீங்களே?

ஒரு வழியா எல்லாரும் சாப்ட்டு முடிச்சு, பில்லுக்கு பணம் குடுத்து (நன்றி : சாமிநாதன்) ரிசப்ஷன்ல வந்து பேச ஆரம்பிச்சோம். எந்த சாமி வேலையோ தெரியல.... 20 நிமிஷத்துக்கு யாருக்கும் ஃபோன் வரல. சாமிநாதன் பட்ட சாராய காச்சறது, ஸ்பெஷல் டேஸ்ட்டுக்கு என்ன சேக்கணும், முத்தூர்ல காபரே டான்ஸ் ஆட்டம் எல்லாத்தப் பத்தியும் விளக்கமா பேசினாரு. (இதுல ஆச்சரியம் இதெல்லாம் அவருக்கு 10 வயசுக்குள்ளயே பரிச்சயம் ஆயிருச்சாம்.)

அப்பறம் ஃபோட்டோ எல்லம் எடுத்துக்கிட்டு, டீ குடிக்க போனா வெயிலான் சத்தமில்லாம் ஜூட். பாவம் எதோ ஆபீஸ் சிக்கல். பிறகு சாமிநாதன் உத்தரவு வாங்கிக்க (குடுக்கலைன்ன என்ன பண்ணுவீங்க? - பரிசல்) நாம பரிசல் கூட வண்டில பஸ் ஸ்டாண்டுக்கு. நான் எதோ கேள்வி கேக்க பரிசல் வேற என்னமோ சொல்ல, அப்பறம்தான் தெரிஞ்சுது அவர் பாஸ் கூட ஃபோன்ல பேசிக்கிட்டிருக்காரு.

நிற்க. நாம என்னமோ தமாஷா எழுதினாலும், அவங்களுக்கு இருக்கற பரபரப்பான வேலைகளுக்கு நடுவுலயும் நம்மள மாதிரி லீவுல வந்து ஊர சுத்தறவங்களயெல்லாம் வரவேற்பு செஞ்சு, சாப்பாடு போட்டு... இதெல்லாம் சாதாரண விஷயமில்ல. சக பதிவர்ங்கறதோ, சிங்கப்பூர்ல இருந்து வந்திருக்கோம்கறதோ ஒரு காரணமா இருக்க முடியாது. நட்புதான் எல்லாத்துக்கும் மேல தெரியுது. இத்தனைக்கும் நான் வெறுங்கையோட போனேன். அவங்களுக்கு குடுக்கறதுக்காக வெச்சுருந்த சில புத்தகங்களையும் சென்னைல இருந்து கிளம்பற அவசரத்துல எடுத்துக்க மறந்துட்டேன். (சொல்ல மறந்துட்டேனே... அன்னிக்குதான் PMP பரிச்ச எழுதி பாஸ் பண்ணிட்டேன்... இந்த விடுமுறைல பண்ணின இன்னொரு உருப்படியான காரியம்) இன்னொரு நண்பர் கிட்ட சொல்லி க்ருஷ்ணா முகவரிக்கு அனுப்ப சொல்லியிருக்கேன்.

பரிசல், வெயிலான், சாமிநாதன் : ஆயிரமாயிரம் நன்றிகள். ஒரு இனிய நட்பை அனுபவிக்க வாய்ப்பு கொடுத்ததற்கு. மூணு பேருமே பெரிய பொறுப்பான பதவிகள்ல இருந்தாலும் ரொம்ப எளிமையா unassuming ஆக இருந்தது ரொம்பவே ஆச்சரியமா இருந்தது. வாழ்த்துக்கள்.

மறுபடி எப்பவாவது ஃபோன் பிடுங்கல்கள் இல்லாம சாவகாசமா சந்திக்க வாய்ப்பு கெடச்சா மகிழ்ச்சியா இருக்கும்.

அய்யய்யோ.... மேல ஃபோட்டோ மாறிப் போச்சு. ஒரிஜினல் ஃபோட்டோ இங்க.



(வெயிலான் ரமேஷ், ஈரவெங்காயம் சாமிநாதன், துக்ளக் மகேஷ்)


(ஈரவெங்காயம் சாமிநாதன், பரிசல் க்ருஷ்ணா, துக்ளக் மகேஷ்)


18 பேர் என்ன நெனைக்கிறாங்கன்னா..:

விஜய் ஆனந்த் said...

:-)))...

ஜோசப் பால்ராஜ் said...

லேட்டா வந்துப்புட்டு இப்டி கையக் கட்டிக்கிட்டு பவ்யமா நின்னா, விட்ருவோமா? இருங்க மகேஷ், நம்ம துபாய் குசும்பன கூப்பிட்டு ஒரு வழிபண்ணிடுவோம். இவருக்கு எல்லாம் குசும்பன் தான் சரியான ஆளு.

ரொம்ப நல்லா, ஒரு வித்தியாசமான நடையில எழுதியிருக்கீங்க வாழ்த்துக்கள்.

PMP பரிட்சையில வென்றதுக்கும் வாழ்த்துக்கள். சீக்கிரம் ஒரு பதவி உயர்வு இருக்குன்னு சொல்லுங்க.

Mahesh said...

@ விஜய் ஆனந்த்: வாங்க... வணக்கம்.... ஒரு நாளைக்கு சுமாரா எவ்வளவு சிரிப்பான்கள் போடுவீங்க? :))))))))))))))))))

@ ஜோசஃப் : நன்றிண்ணே !!! குசும்பன் கிட்ட மாட்டிவிட போறீங்களா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.........

விஜய் ஆனந்த் said...

// Mahesh said...
@ விஜய் ஆனந்த்: வாங்க... வணக்கம்.... ஒரு நாளைக்கு சுமாரா எவ்வளவு சிரிப்பான்கள் போடுவீங்க? :)))))))))))))))))) //

அவ்வ்வவ்வவ்வவ்வ்....என் கடன் சிரிப்பான் போட்டு கிடப்பதே!!

:-))))))))...

பரிசல்காரன் said...

இந்த வாரப்ப்பதிவரா உங்க ஃபோட்டோவ நான் போட்ட நேரம் பார்த்து இதை எழுதியிருக்கீங்க. சொல்லிவெச்சுட்டு செஞ்சதா நெனைக்கப் போறாங்க!

அப்புறம்..

அன்னைக்கு உங்களை சரியா கவனிக்கலை, கவனிக்க முடியலைங்கறது எங்களுக்கும் தெரியும், உங்களுக்கும் தெரியும். ஆனா, கவனமா அதை மறைச்சு எழுதின உங்க பண்புக்கு என் வந்தனங்கள்!!!

Mahesh said...

@ பரிசல் :

அட... ஆமாம்... கதய படிக்கற சுவாரசியத்துல கவனிக்கவே இல்ல. இந்த வார பதிவரா என்னய போய் போட்டிருக்கீங்க !!! போங்க வெக்கமா இருக்குது :)

ஆமா இன்னும் என்னய என்ன "கவனிக்கலாம்"னு இருந்தீங்க... அவ்வளவு வேலைகளுக்கு நடுவுல 2 மணி நேரம் இருந்ததே பெருசு.

Anonymous said...

plz add ur post in thamilbest

Ramesh said...

Very Nice!

ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க ...

What is PMP?

Anonymous said...

// மொதல்ல நம்ம ஆபீஸ் இடத்த மாத்த சொல்லணும். புது பஸ் ஸ்டாண்டுக்கு பக்கத்துல இருக்கு. //

அட! புது பஸ்ஸ்டாண்டு / பழைய பஸ்ஸ்டாண்டு எங்கேன்னாலும் நான் தான் பதிவர்களை கூட்டிட்டு வருவேன். ஏன்னா, நான் தான் திருப்பூர்ல இருக்கேன். க்ருஷ்ணா இருக்கிறது 'பல்லடம்' :) .

இதுல ஒரு வசதி என்னன்னா, என்னைய விட்டுட்டு பரிசல் போய் வலைப்பதிவர்களை தனியா பாத்துட முடியாது.

// இன்னும் கொஞ்ச நாள் போனா ஆபீஸ்லயே கேக்க ஆரம்பிச்சுருவாங்க - இன்னிக்கு எதுவும் பதிவர் சந்திப்பெல்லாம் இல்லயான்னு. //

ஏற்கனவே கேட்டுட்டிருக்காங்க.

// வெயிலான் வேற ஃபோன்லயே இருக்காரு. //

வேற வழியில்லை பாஸ்.

// ஃபோன் பிடுங்கல்கள் இல்லாம சாவகாசமா சந்திக்க வாய்ப்பு கெடச்சா மகிழ்ச்சியா இருக்கும். //

அப்படி சந்திக்கணும்னா, சிங்கப்பூர்ல தான் சந்திக்கணும்.

ரொம்ப நல்லா எல்லா விசயங்களையும் மறக்காம எழுதியிருக்கீங்க. நன்றி மகேஷ்!

பழமைபேசி said...

தேர்வில் சித்தி அடைந்தமைக்கு வாழ்த்துக்கள்! இப்போது நடுநிசி என்பதால், நாளை மீண்டும் இப்பதிவை, படிக்க வருவேன்.

Mahesh said...

@ ரமேஷ் : வாங்க... வருகைக்கு நன்றி... அடிக்கடி வாங்க....

@ வெயிலான் : நன்றி... நன்றி...

Mahesh said...

@ பழமைபேசி : வாங்க...வங்க... வாழ்த்துக்கு நன்றி.....

Mahesh said...

@ valai:

வருகைக்கும் செய்திக்கும் நன்றி.... தனியே மெய்ல் அனுப்பறேன்..

Anonymous said...

ஆஹா....பல வேலைகளுக்கு நடுவே தான் திருப்பூர் சென்று வந்ததை மகேஷ் சொல்லவே இல்லை. அதனால்தானோ என்னவோ பதிவை படித்ததும் நட்பின் ஈரமும், மண்ணீன் வாசனையும் மனதை என்னவோ செய்தது. என்ன இருந்தாலும் நம்மூரு நம்மூருதான்! எல்லாரும் என்ன சாப்பிட்டார்கள் என்பதை அப்படியே மறைத்து விட்டார்கள். ஆஹா....நம்மாளு நம்மாளுதான்!

பழமைபேசி said...

@@@chitravini ...
//அது சரிங்க அண்ணே, நீங்க எப்ப கடை திறக்கப் போறீங்க?

புதுகை.அப்துல்லா said...

மாறிப்போன படத்தில் புஷ்சின் படத்திற்கு பரிசலின் பெயரைப் போட்ட உங்க நுண்ணரசியலை இரசித்தேன்.
( ஏதோ நம்பளால முடிஞ்சது) :)))

Mahesh said...

@ அப்துல்லா :

ஓஓஒ... இதுதான் நுண்ணரசியலா ???? இது தெரியாமப் போச்சே.... இன்னும் நுணுக்கமா செஞ்சிருக்கலாமே !!!!

Mahesh said...

வாங்க குடுகுடுப்பை... இப்பத்தான் ரெண்டு நிமிஷம் முன்னால நீங்க இந்தப் பக்கம் வரதில்லன்னு உங்க பதிவுல பின்னூட்டம் போட்டுட்டு வந்தேன்... இத பாக்கவே இல்ல... வருகைக்கு நன்றி...