Saturday, October 4, 2008

சென்னையில் ஒரு மழைக்காலம் - புதுகை அப்துல்லாவுடன்....

"ஹலோ புதுகை அப்துல்லாவா?"

"ஆமாம்... நீங்க....?


"மகேஷ்... துக்ளக் மகேஷ்..."


"ஆஆஆ... வாங்க வாங்க...எப்ப வந்தீங்க.... உங்க ஃபோனுக்காக காத்துக்கிட்டிருந்தேன்.."


"நேத்து காலைலதான் டில்லியிலிருந்து திரும்பினேன்.... இன்னிக்கு உங்களை சந்திக்க முடியுமா? உங்க ஆபீஸ் எங்க இருக்கு?"


"ஆபீஸ் போயஸ் கார்ட்ன்ல.... இப்ப மணி 4 ஆகுது... ஒரு 5 மணி சுமாருக்கு சந்திக்கலாமா?"


"நானும் அந்தப் பக்கம்தான் வந்துக்கிட்டிருக்கேன்... சந்திப்போம்"


அப்பறம் பக்கத்துல இருக்கற என்னோட அக்கா வீட்டுல இருந்து கிளம்பினதுமே மழைத்தூரல். 100 மீட்டர் போறதுக்குள்ளயே பயங்கர மழை. அப்துல்லா சொன்ன ஒரு தெருவைத் தாண்டிப் போயிட்டு அங்கிருந்து ஃபோன் பண்ணினா நான் நின்னுக்கிட்டிருக்கற இடம் அவருக்கு புரியல. அவர் சொல்ற இடம் எனக்குத் தெரியல. மழைல ஒரு சின்ன சந்தோட கடைசிக்கு போனப்பறம்தான் அது முட்டுச்சந்துன்னு தெரிஞ்சுது. அப்பிடியே கார ரிவர்ஸ் எடுத்து மறுபடி திரும்பி வரதுக்குள்ள.........


ஒரு வழியா ஆபீஸ கண்டு புடிச்சு போனா வாசல்ல வேற ஒரு கார் குழிக்குள்ள மாட்டிகிட்டு நிக்குது. நடுத்தெருவுல கார விட்டுட்டு மழைல நனஞ்சுக்கிட்டே உள்ள போனா... பாக்கறவங்கள்லாம் மகேஷ் சாரா, மகேஷ் சாராங்கறாங்க.


"அப்பிடி உக்காருங்க இப்ப வந்துருவாரு....சொல்லிட்டுதான் போனாரு....."


ரெண்டு நிமிஷத்துல அப்துல்லா ப்ரசன்னமானார். நோன்பு முடிக்கற நேரம். இருந்தாலும், நம்மளப் பாத்த ஒடனே, ஆபீஸ் காரங்க கிட்ட சொல்லி நம்ம கார உள்ள வெக்க சொல்லிட்டு, அவர் கார்ல அவரோட வீட்டுக்கு கூட்டிக்கிட்டு போனாரு. ரொம்ப நாள் பழகின மாதிரியான அந்த இயல்பான அழைப்பும், அவரோட எளிமையும் (ரொம்ப பெரிய பதவில இருக்காரு) ஆச்சரியமா இருந்துச்சு. அதோடயே அவர் வீட்டுக்கு போனா, அவருடைய மற்ற நண்பர்ளுடைய அறிமுகமும் கிடச்சுது. வீட்டுலயே அவர் நோன்பு முடிச்சு, கஞ்சி குடிச்சுட்டு வந்த பிறகு, கீழ வந்து ஒரு டீயும் குடிச்சோம். நிறைய பேசினோம்... பல விஷயங்கள பகிர்ந்துக்கிட்டோம். கொஞ்சம் "அதிகப்பிரசங்கித்தனமாக்" கேட்ட சில கேள்விகளுக்கு கூட பொறுமையா பதில் சொன்னாரு. பேசிக்கிட்டே இருந்ததுல ஃபோட்டோ எடுத்துக்கணும்னு தோணவே இல்ல. முதல் முறையா சந்திக்கிறோம்கற உணர்வே இல்லாம ரொம்ப இயல்பா இருந்தது இன்னும் நிறைவா இருந்தது. ஒரு நல்ல மனிதரை சந்திச்ச திருப்தியும் இருந்தது.


சென்னைய விட்டு கிளம்பறதுக்குள்ள இன்னொரு முறை சந்திக்கணும்னு நெனச்சேன். ஆனா அவர் விடுமுறைல குமரகம் போயிட்டாரு. சந்திக்க முடியாததுல ஒரு வருத்தம். ஆனா சென்னைக்குப் போக நிறைய சந்தர்ப்பங்கள் இருக்கு.

13 பேர் என்ன நெனைக்கிறாங்கன்னா..:

Anonymous said...

// முதல் முறையா சந்திக்கிறோம்கற உணர்வே இல்லாம ரொம்ப இயல்பா இருந்தது இன்னும் நிறைவா இருந்தது. ஒரு நல்ல மனிதரை சந்திச்ச திருப்தியும் இருந்தது. //

நானும் நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். விரைவில் அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் என நினைக்கிறேன்.

சிங்கப்பூர் எப்போ?

பழமைபேசி said...

அழகான நடைல, வந்ததும் வராததுமா ஒரு நல்ல பதிவு..... இனியும் நிறைய வரும்ங்கிற மகிழ்ச்சியும் கூட.

Mahesh said...

@ வெயிலான் : இந்தாங்க .... பிடியுங்க துக்ளகானந்தாவின் வரத்தை.... சீக்கிரமே நீங்க அப்துல்லாவை சந்திக்கக் கடவது !!!

@ பழமைபேசி : நன்றி... சீகிரமே எல்லாம் எழுதறேன்...

விஜய் ஆனந்த் said...

:-)))...

சிங்கப்பூர் திரும்பியாச்சா???

Anonymous said...

பழமைபேசி சொன்ன மாதிரி வந்தவுடன் ஒரு நல்ல பதிவு. புதுகை அப்துல்லாவை உடன் சந்திக்க வேண்டும் என்கிற ஆவல். டிசம்பரில் நான் சென்னை வர இருக்கிறேன். அப்பொழுது கண்டிப்பாக அவரை சந்திக்க வேண்டும். நல்ல மனிதர்கள் குளிர் கால கதிரவன் உதயம் மாதிரி. வருவதற்கு காத்திருக்கவேண்டும்......வந்தவுடன்....குளிர் காய வேண்டும்; நல்ல மனிதரின் நட்பு வெப்பம் தாக்கும் போது நம்மை அறியாமல் நாம் நம் மன சாட்சியின் முன்பு தலை குனிந்து நிற்கிறோம்; நாம் ஏன் இப்படி இல்லை என்று!யாரோ சொன்னார்கள்.....the more you meet good men, the more you realise that how bad you are...எவ்வளவு உண்மை.

Mahesh said...

@ அண்ணன் (chitravini) : பேசாம நீங்களும் "துக்ளக்"ல கூடுதல் பதிவரா சேந்துக்கறீங்களா?

@ விஜய் ஆனந்த் : ஆமாங்க... வந்தாச்சு.... இனிமேலாவது ஒழுங்கா எழுத ஆரம்பிக்கணும்...

பழமைபேசி said...

// நல்ல மனிதர்கள் குளிர் கால கதிரவன் உதயம் மாதிரி. வருவதற்கு காத்திருக்கவேண்டும்......வந்தவுடன்....குளிர் காய வேண்டும்; நல்ல மனிதரின் நட்பு வெப்பம் தாக்கும் போது நம்மை அறியாமல் நாம் நம் மன சாட்சியின் முன்பு தலை குனிந்து நிற்கிறோம்; நாம் ஏன் இப்படி இல்லை என்று!யாரோ சொன்னார்கள்.....the more you meet good men, the more you realise that how bad you are...எவ்வளவு உண்மை.
//

அண்ணே, நீங்களும் எழுத ஆரம்பிங்க.... என்ன அழகா, உவமானம் போட்டுத் தாக்குறீங்க.... அருமை!

பரிசல்காரன் said...

தலைப்பு அருமை மகேஷ்!

ஃபோட்டோ எடுக்கலியா? என்ன சாரே? இங்க வந்து வளைச்சு வளைச்சு எடுத்தீஞ்க. அவ்ளோ ஸ்லிம் கேமராவை என்னை மாதிரி எப்பவுமே பாக்கெட்ல வெச்சுக்க வேணாமா?

புதுகை.அப்துல்லா said...

அண்ணே! நல்லபடியா ஊருக்கு திரும்பிட்டீங்களா? உங்களைப் பார்த்ததில் எனக்கும் மிக்க சந்தோஷம்ணே! நம்ப சந்திப்பைப் பற்றி விரைவில் நானும் எழுதிடுறேன்.

குடுகுடுப்பை said...

சென்னையில் ஒரு கஞ்சி காலம்

rapp said...

:):):)

Thamira said...

அப்துல்லா போல இயல்பான மனிதரைக்காண்பது அரிது. நான் முதன்முதலாக அவரை மங்களுர் திருமணத்தில் சந்தித்த போது, பிறரை அன்றுதான் சந்திப்பதைப்போல அறிமுகம் செய்து கொண்டதையும், இவரை மட்டும் 'வா மச்சி என்னா லேட்டு' என்பது போலவும் உணர்ந்தேன்.

வெண்பூ said...

//முதல் முறையா சந்திக்கிறோம்கற உணர்வே இல்லாம ரொம்ப இயல்பா இருந்தது இன்னும் நிறைவா இருந்தது. ஒரு நல்ல மனிதரை சந்திச்ச திருப்தியும் இருந்தது.
//

சேம் பீலிங்ஸ்... முதல்முறை அவரை சந்தித்த போது இதேதான் தோன்றியது...