Wednesday, August 20, 2008

நீங்க ஏமாந்தவரா, ஏமாறுபவரா?

ரெண்டும் ஒண்ணுதானடான்னு நீங்க மெர்சலாயிட்டீங்களா? நான் ரெண்டுமே. நம்ம நண்பர்களும் நம்மளை மாதிரிதான் இருப்பாங்களோன்னு ஒரு 'இது'. ஹி ஹி....கோச்சுக்காதீங்க... நாமல்லாம் அப்பிடியா பழகறோம்?

அது என்னன்னா, நாம சின்ன வயசுல இருந்தே கொடையப்ப வள்ளலா.... நெத்திலயே வேற இவுரு பெரிய I.V.சசி ((இளிச்ச வாயி) அப்பிடின்னு பச்ச குத்தியிருக்கா...போற வாறவங்களுக்கெல்லாம் இவன ஒரு தட்டு தட்டிப் பாத்தா என்னன்னு தோணும் போல. ஒரு தடவை என்ன ஆச்சு (அட....நாம ஸ்கூல்ல நல்ல புள்ளயா இருக்கயிலன்னு சொல்லணுமாக்கும்!) வீட்ல குமுதமும், தினமணி கதிரும் (அப்ப அது தனி புத்தகம்) வாங்கிட்டு வர சொன்னாங்க. அது அப்பொ பஸ் ஸ்டாண்டுல இருக்கற சாரதா புக் ஸ்டால்லதான் வாங்கறது வழக்கம்.

பஸ் ஸ்டாண்ட் கிட்ட போகும்போது, நம்ம தலைக்குப் பின்னால சுத்தற ஒளி வட்டத்த பாத்துட்டு ஒரு ஆளு நம்ம பக்கம் வந்தாரு. நல்லா வாட்ட சாட்டமா வேற இருந்தாரா, நமக்கு உள்ளூர ஒரு நடுக்கம்.

'டேய்...எங்கடா போற? ம்ம்ம்...கேக்கறனில்ல?'

'பொஸ்தகம் வாங்க'

'ம்ம்ம்...உள்ள பாத்தியா...பூராம் போலீசு...உள்ள போனா கையில கயிறு மாட்டீருவாங்க...தெரியுமில்ல'

'.......'

'எங்கிட்ட காசைக் குடு... நான் போய் வாங்கீட்டு வர்றேன்... சீக்கரம்'

'.....'

'பொஸ்தகம் வாங்கணுமா வேணாமா? ம்ம்ம்ம்...'

'வேணும்'

'அப்ப குடு காச...'

'இந்தாங்க...ஒரு குமுதம் அப்பறம் தினமணி கதிரு'

'இங்கியே நில்லு... உள்ள வராத... போலீசு...பாத்தியல்ல...'

'செரி...'

அம்புட்டுதேன்... இன்னும் என்ன கதை கேக்கறீங்க... என்ன... வீட்ல ஒரு ரூல் தடி ஒடஞ்சது ஒரு எக்ஸ்ட்ரா நட்டம். அங்க அன்னிக்கு போலீசு எதுக்கு வந்தது, ஏன் வந்ததுன்னு இன்னிக்கு வரைக்கும் தெரியாது.

இது ஆச்சா...ஒரு 4 வருசம் முன்னால, மெட்ராஸ் அசோக் பில்லர் சரவண பவன்ல காலைல டிஃபன் சாப்டுட்டு வந்து பைக் ஸ்டார்ட் பண்ணும்போது, ஒரு நடுத்தர வயசுக்காரர் பக்கத்துல வந்தாரு. பாக்க ஜென்டில்மேன் (ஆமா...அர்ஜுன்....உங்களயெல்லாம்....) மாதிரி இருந்தாரு.

'சார்...ஒரு ஸ்மால் ரிக்வஸ்ட்'

இவுரு கூட பேசலாமா வேண்டாமான்னு யோசிக்கும்போதே...

'பயப்படாதீங்க சார், நான் கடலூர்ல கவர்மென்ட் காலேஜுல லெக்சரரா இருக்கேன். பேரு கண்ணன். அம்மாவ இப்ப்த்தான் பஸ் ஏத்தி விட்டேன். எவனோ பர்ச அடிச்சுட்டான். கைல பைசா இல்ல. இப்பொ ஒரு 40 ரூபா இருந்தா கடலூர் போயிடுவேன். போனதும் உங்களுக்கு மணி ஆர்டர் அனுப்பிடறேன். வேற யார்ட்டயும் கேக்க கூச்சமா இருக்கு. கேவலமா பேசறாங்க. ப்ளீஸ் சார்...'

சொல்லும்போதே கண்ல தண்ணி.... இது என்னடாது வம்பா போச்சு..... நமக்குள்ள இருக்கற பாரி, ஓரி, காரி, பேகன், ஆய் எல்லாம் 'அய்யய்யோ.. பாவமே... என்னடா யோசிக்கற... குட்றா... குட்றா..' ங்கறாங்க. ஒடனே கர்ணன் மாதிரி ஒரு 50 ரூபா எடுத்து குடுத்துட்டோம்ல.

'சார்... ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் சார்...உங்க அட்ரஸ் குடுங்க சார்... ப்ளீஸ்... போனதும் மொத வேலயா திருப்பி அனுப்பிடறேன் சார்"

'எழுதிக்குங்க....... .... ..... ..... ... 600089 '

'சரியா பாருங்க சார்'

'ஒக்கே. சரியா இருக்கு.'

'தேங்க்ஸ் சார். வயசுல ரொம்ப சின்னவங்க நீங்க... இல்லாட்டா கால்ல விழுந்திருப்பேன்"

'அட...அதெல்லாம் வேண்டாம் சார்... பாத்து போங்க.. ஜாக்ரதையா இருங்க'

எதோ ஒரு பஸ் வந்ததும், அவர் அத தொரத்திகிட்டுப் போயிட்டார்.

மணி ஆர்டரா ? ம்ம்ம்....வரும்....நெனச்சுக்கிட்டிருங்க. அதுக்கப்பறம் நான் 4 வீடு மாறியாச்சு. ஆனா அந்த சம்பவத்துக்கு அப்பறம் ஒரு மாசம் கழிச்சு அதே எடத்துல, அதே ஆள வேற ஒருத்தர் கிட்ட பேசிக்கிட்டு இருக்கறத பாத்தேன். அந்த அப்பாவியயாவது காப்பாத்தலாமேன்னு கிட்ட போனேன். ஆனா...கிளிக்கு ரக்க மொளச்சு பறந்தே போயிடுத்து. அந்த அப்பாவி கிட்ட விஷயத்த சொல்லிட்டு, சரவண பவன் மேனேஜர் கிட்டயும், செக்யுரிடி கார்டு கிட்டயும் சொல்லிட்டு கெளம்பிட்டேன். அவங்களும் இன்னொரு தடவ அந்த ஆளப் பாத்தா நாங்க கவனிச்சுக்கறோம்னு சொல்லிட்டாங்க.

அதுக்கப்பறம் பல பேர் பல தடவை வந்து உதவி கேட்டிருக்காங்க. ரொம்ப சூதானமா கண்டுக்காம போயிடுவேன். சில சமயம் 'இது ஒரிஜினலோ'ன்னு தோணும். ஆனாலும் இன்னொரு தடவை ஏமாற விருப்பம் இல்ல.

நீங்க எப்பிடி?

12 பேர் என்ன நெனைக்கிறாங்கன்னா..:

மங்களூர் சிவா said...

:))))))

வீட்டுக்கு வீடு வாசப்படி!

ஜோசப் பால்ராஜ் said...

நீங்க சொல்ற சரவணபவன் கதை மாதிரி எனக்கும் ஒரு கதை நடக்க பார்த்துச்சு. கேரளாவுல இருந்து ஒருத்தர் வந்து, என் கல்லூரிக்கு பக்கத்துல இருக்க பஸ் ஸ்டாப்ல நின்னுக்கிட்டு அவரு பைய யாரோ திருடிட்டாங்க, கேரளா போக உதவி செய்யிங்கன்னு கேட்டாரு, அன்னைக்கு என் பிறந்த நாள், சரி ஒருத்தருக்கு உதவலாம்னு போயி அவருகிட்ட விவரம் கேட்டேன். எல்லாம் சொன்னவரு அவரோட முகவரி கேட்டதுக்கு, நமக்கு கேரளாவ பத்தி சுத்தமா விவரமே தெரியாத மாதிரி நினைச்சுகிட்டு நெய்யாற்றின் கர (கரை), கொச்சின் மாவட்டம்னு சொன்னாரு. நெய்யாற்றின் கர நாகர்கோவில்ல இருந்து திருவனந்தபுரம் போறப்ப கேரள மாநில எல்லையில வர்ர ஊரு. அது எப்டி திருவனந்தபுரத்த தாண்டி கொச்சி மாவட்டத்துல வரும்னு சுதாரிச்சு ஒரு வேளை சோறு மட்டும் வாங்கி கொடுத்து ஓடி போயிடுன்னு சொல்லி அனுப்பி விட்டுட்டேன். ரொம்ப‌ தினுசு தினுசா ஏமாத்துரானுங்க‌. இவ‌ங்க‌ மாதிரி ஆளுங்க‌ளால‌ நாம‌ உண்மையிலயே பாதிக்க‌ப்ப‌ட்ட‌வ‌ங்க‌ளுக்கு கூட‌ உத‌வ‌ முடியற‌து இல்ல‌.

உருப்புடாதது_அணிமா said...

நானும் உங்களோட சேர்ந்து்குறேன்..
ஏனா நானும் இ. வா தான்..

புதுகை.அப்துல்லா said...

//நான் ரெண்டுமே. நம்ம நண்பர்களும் நம்மளை மாதிரிதான் இருப்பாங்களோன்னு ஒரு 'இது'.//

க்கும்!!இதுல சந்தேகம் என்ன? கண்டிப்பா உங்கள மாதிரிதான்

புதுகை.அப்துல்லா said...

நெத்திலயே வேற இவுரு பெரிய I.V.சசி ((இளிச்ச வாயி) அப்பிடின்னு பச்ச குத்தியிருக்கா.//

நெத்தியில மட்டுமா? உடம்பு முழுக்காதான் :))

புதுகை.அப்துல்லா said...

மெட்ராஸ் அசோக் பில்லர் சரவண பவன்ல //

உங்ககிட்ட சரவணபவனா? எங்கிட்ட எக்மோர் வாசல்ல..இதுமாதிரி ஆளுகளால உண்மையா கஸ்டப்படுறவ‌ங்களுக்கு உதவ முடியாமப் போயிருதுண்ணே.‌

பரிசல்காரன் said...

எனக்கு இது அடிக்கடி நடக்கும். ஒவ்வொரு தடவையும் நான் இ.வா.தான். ஆனாலும் சளைக்கறதில்ல. நானும், அது மாதிரியான ஏமாத்து ஆசாமிகளும்...

Mahesh said...

@ மங்களூர் சிவா : வாங்கண்ணே... மொத போணி... நன்றி

@ ஜோசப் பால்ராஜ் : இனிமே சரவண பவன்னாலே கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கணும் போல...

@ உருப்படாதது அணிமா : வாங்க வாங்க... நம்ம கச்சி ஸ்ட்ராங்க் ஆயிட்டே இருக்கு

@ அப்துல்லா : நீங்களுமா ? அவ்வ்வ்வ்வ்வ்வ்......

// இதுமாதிரி ஆளுகளால உண்மையா கஸ்டப்படுறவ‌ங்களுக்கு உதவ முடியாமப் போயிருதுண்ணே. //

சரியாச் சொன்னீங்க...

@ பரிசல் : நாமல்லாம் உடுமலயில்ல... குடுத்தே செவந்த கரங்கள் (அட... அடி இல்லீங்க)

Mahesh said...

நம்ம பதிவையும் மதிச்சு, அதுக்கு பின்னூட்டமும் போட்டு, தமிழ் மணம் மொத பக்கத்துலயும், 'ம' திரட்டி-ல சூடான இடுகைகள்ளயும் கொண்டாந்துட்டீங்களே....

எல்லாருக்கும் நன்றி..... நன்றி.... அழுகாச்சியா வருது :)

அணிலன் said...

வேண்டாம்ங்க ....பல மொழிகள்ல ஏமாந்திருக்கேன்...இதுல கொடுமை என்னன்னா மக்கள் சில சமயம் "சார், English?" அப்பிடின்னு கேக்கும்....ஒரு முறை இதே மாதிரி ஒரு Professor கிட்டே Bangaloreல சிக்கியிருக்கேன்....அவரு North India, இங்க வந்து இப்பிடி ஆயிடுச்சுன்னு ஒரு செண்டி.....ஹும்ம்ம்ம்ம்.......

priyamudanprabu said...

உக்காந்து யோசிப்பாங்களோ??????
பெங்களூரில் வேலை செய்த போது
நடராஜ் தியட்டருக்கு விருமாண்டி பாக்க போனேன்
ஒருவர் அருகில் வந்து தான் தமிழகத்தில் இருந்து வேலைதேடிவந்த்த தாகவும்,வேலையில்லாமல் சாப்பாட்டுக்கே வழியில்லை என்றும் கூறினார்,எனக்கு சந்தேகம் வந்தபோதும் என்னிடம் கையேந்தும் நிலையில் இருக்கும் அவருக்கு பணம் கொடுத்தேன்
போனால் போகட்டும்

Mahesh said...

@ அணிலன் : ஒருத்தரயும் விட்டு வெக்க மாட்டாங்க போல இருக்கே...

@ பிரபு : உருண்டு பெரண்டு கூட யோசிப்பாங்க.... தியேட்டருக்கு வந்து சினிமா பக்க காசு இருக்கு...ஆனாலும் ஏமாத்தறாங்க பாருங்க